பக்கம் எண் :

16நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

பிழைத்தேன் யான் என்றான் - என் பிறவி நோயாகிய பெருந்துன்பங்களெல்லாம் அறவே நீங்கிப்போகும்படி உய்ந்தேன் என்று கூறினான்.

(க - து.) தருமராசன் வியாசரைப்பார்த்து அடிகள் ஈண்டு எழுந்தருளியதால் பெரும்பேறுற்று உய்ந்தேன் என்றான்.

(வி - ரை.) மறை முதல்வன் என்பது இறைவனைக் குறிக்குமாயினும் ஈண்டு வேதத்தை முறைப்படுத்திய சிறப்பினால் வியாசரைச் சுட்டிற்று. வியாசரைக்கண்டதும் தருமனுக்கு உள்ளன்பு மீதூரப் பெரியார் துணையால் எத்துன்பமும் நீங்கும் என்னும் கருத்தினனாகப் ‘பிறவிப் பெருந்துயரம்.........பிழைத்தேன்’ என்றான். பிறவித்துன்பத்தைக் குறித்துப் பேசாத ஏடுகளே கிடையா. இதைப் பட்டினத்தடிகள் இறைவனிடத்து முறையீடு செய்யுங்கால்,

1‘மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’

என, வேண்டுவாராயினார்.

பேர் ஆழியான் என்பதற்குப் பெரிய பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் இறைவனென்று பொருள் கொற்றலுமாம், கண்ணன் திருமால் அவதாரமாகக் கோடலான். ஏவல் கொள்ளுதல் - தன் குறிக்கோளுக்கு ஏற்றபடி வேலை வாங்குதல். பாண்டவர்க்காகக் கண்ணபிரானானவர் அழைத்தபோது வந்து பல்வகை உதவிகளை, நட்பு முறையிலும் உறவு முறையிலும் செய்தனராகலான் ‘ஏவல் கொண்ட’ என்றார். அரசு - வேந்தன் : எழுவாயாக வந்தது. (4)

தருமன் மனத்துயரின் காரணத்தை வியாசர் வினவல்

12. மெய்த்திருவந் துற்றாலும் வெந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறைபால் உள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து.

1. பட்டினத்: