வியாசர், சூதாடுதல் அரசர்க்கு இயல்பே
எனல்
16. கேடில் விழுச்செல்வம் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண்
- வாடிக்
கலங்கலைநீ என்றுரைத்தான் காமருவு நாடற்
கலங்கலைநூல் மார்பன் எடுத்து.
(இ - ள்.) காமருவு நாடற்கு -
சோலைகள் நிறைந்த குருநாட்டு வேந்தனான தருமனுக்கு,
இலங்கு அலைநூல் மார்பன் - வெண்மைநிறம்
பொருந்திய அசைகின்ற பூணூல் அணிந்த திரு
மார்பினரான வியாசர், கேடுஇல் விழுச்செல்வம்
கேடு எய்து சூது ஆடல் - என்றும் அழிவற்ற பெருஞ்
செல்வமும் அழிந்து போகுமாறு சூதாடுதல், ஏடு
அவிழ்தார் மன்னர்க்கு இயல்பே - இதழ்விரிந்த
மலர்மாலை யணிந்த அரசர்கட்கு இயற்கையேயாகும்;
வாடி கலங்கலைநீ - நீ அதற்காக வருந்தி உடல்
மெலிவடையாதே என்று, எடுத்து உரைத்தான் -
காரணங்காட்டிக் கூறினான்.
(க - து.) ‘சூதாடுதல் அரசர்கள்
இயல்பே. ஆதலால், நீ அதற்கு வருந்தாதே’ என்று
வியாசர் தருமனுக்குத் தேறுதல்மொழி கூறினார்.
(வி - ரை.) 1‘ கேடுஇல் விழு செல்வம்’
கொடுக்கக் கொடுக்கக் குறையாப் பெருஞ் செல்வம்.
அச் செல்வம் பிற எதனாலும் அழியாது. சூதால்
அழியும் என்பாராய் ‘கேடெய்து சூதாடல்’
என்றார். காண் - அசைநிலை. அல்லது ‘நீ
அறிந்துகொள்’ என்று கூறலுமாம். (9)
தருமன், ‘என்னைப்போல் காட்டில்
வாழ்ந்தோருண்டோ ?’
என்று வினவல்
17. கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்.
(இ - ள்.) விண் இழந்த மின்போலும்
நூல் மார்ப - மேகத்தினின்றும் வெளித்தோன்றிய
மின்னலைப் போன்ற பூணூலணிந்த மார்புடையானே, கண்
இழந்து மாயம் கவறு ஆடி - (அறிவாகிய)
1. திருக் : 400-ல் இச் சொல்தொடர் வருத
லறிக.
|