திருவள்ளுவப் பெருமான்,
1‘அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு’
என்பதில், ஓரறிவுயிர்களான மரஞ்செடி
கொடிகள் முதல் ஆறறிவினரான மக்கள்வரை
வேற்றுமையின்றிக் கொள்ளும் பேரன்பின் -
பேரிரக்கப் பண்பினுக்கு ஒருதலைச் சார்பாக எழும்
அன்பையே தாயாகக்கொண்டு அதனினின்றும்
கிளைத்தெழுந்த பேரன்பைச் சேய் (அதன் குழந்தை)
ஆக உரைத்தருளியதும் நினைவு கூரற்பாலன எனவே, இத்
தாய்மை உள்ளமே இங்கே தமயந்தியை நோக்கி
நோக்கி ‘என் நினைந்தாய்’ என்றுகூறி
வருந்துவதைக் குறித்தார். பொன் : உவமஆகுபெயர்.
பொன் போன்று உயர்வாகக் கொள்ளத்தக்காள்,
அன்றித் திருமகள் போன்ற அழகுடையாள்,
பொன்போன்ற ஒளி பொருந்திய மேனியுடையாள் என்று
பல பொருள் நயந்தோன்ற நின்றது, இச்சொல். (155)
கலிதொடர் காண்டம் முற்றும்.
----
1. திருக்குறள் : 757.
|