3. கலிநீங்கு காண்டம்
திருமால் காப்பு
334. மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காதலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை
முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப
வந்தருளும் செந்தா மரை.
(இ - ள்.) மால்யானை - கசேந்திரன்
என்னும் பெரிய யானையானது, முந்து அருளும் வேத முதலே
என அழைப்ப - (அடியார்கள் வேண்டும்) முன்பே
அவர்கட்குத் திருவருள் செய்கின்ற மறைக்கு முதற்
காரணமானவனே ! என்று கூப்பிட்டபோது, வந்து அருளும்
செம் தாமரை - ஏரிக் கரையில் நடந்து வந்து நின்ற
சிவந்த தாமரை மலர்போன்ற (திருமாலின்)
திருவடிகளை, மூலம் பழமறைக்கு முன்னேயும் காணல் ஆம் -
முதல் நூலாகிய வேதத்துக்கு முன் வரிசையிலும்
பார்க்கலாம், காலிக்கு பின்னேயும் காணல் ஆம் -
ஆனிரைகளுக்குப் பின் வரிசையிலும் பார்க்கலாம்.
(எனவே அத்தகைய திருவடிகளை வணங்குவோமாக.)
(க - து.) கசேந்திரனென்னும் பெரிய
யானைக்கு வந்து அருள் செய்த திருமாலின் திருவடிகளை
வேதங்களின் முன் வரிசையிலும் பார்க்கலாம் ;
பசுங்கூட்டங்களின் பின் வரிசையிலும்
பார்க்கலாம் ; எனவே, அத்திருவடிகளை நாம்
வணங்குவோமாக என்பதாம்.
(வி - ரை.) மூலம் - முதன்மை, அஃதாவது:
கல் தோன்றாக் காலத்திற்கும் முற்பட்ட காலம்;
மிகமிக முற்பட்ட காலம் என்பது இதன் திரண்ட
பொருள். மூலப் பழமை: ஒருபொருட் பன்மொழி.
மறைகளின் முடிபு, இறைவன் அளவற்ற ஆற்றல்களை
எடுத்துப் பன்னியுரைப்பது. இறைவன்
பிறப்பிறப்பற்றவன் ; திணைபால் கடந்த
செம்பொருள் ; அதைப்பற்றி உரைத்து உரைத்து அவன்
ஆற்றல் முழுமையும் விளக்கமுடியாமல் நிற்பதே
வேதத்தின் இறுதி நிலையாக உண்மை, பல்வகை
நூல்களால் அறியலாம். அம் மறையில் எங்கே
எடுத்தாலும் முதன்மையாகக் கூறுவது ஞான காண்டம் கரும
காண்டம் என்ற இரண்டி
|