இன
இனிக் கல்லாடம்
சூல் உற்ற பெண்டிரின் இயல்பு உரைத்து, அவ்வியல்புகள்
இன்றியே தூணில் பிறந்த குழவியைக் கூறும்,
“பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது,
வளைகாய் விட்ட புளி அருந் தாது,
செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது,
மனைபுகை உண்ட கருமண் இடந்து
பவள வாயில் சுவைகா ணாது,
பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக்
குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது,
மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என
வரிகொடு மதர்த்த கண்குழி யாது,
குறிபடு திங்கள் ஒருபதும் புகாது,
பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்பத்
தூணம் பயந்த மாண்அமர் குழவி”
[ பீரம் : பூவரசு, வாகை, வயாவு: கரு உயிர்ப்பு. வளைகாய்
விட்ட புளி: வளைந்த காயினின்று நீக்கப்பட்ட புளி திரிந்து: மாறி. பயவாது: தோன்றாது. இடந்து:
தோண்டி. வரிகொடு மதர்த்த கண்: அரி ஓடிய செருக்குள்ள கண். பொன் பெயர் உடையோன்: இரணியன்.
]
( ஈ ) கம்பன்
இராமாயணத்தில் இரணிய வதைக்கே ஒரு படலம் பொதிந்து
உள்ளார். அப்படல அமைப்பும், கருத்து ஆழமும், நடை அழகும் காவியத்தின் ஏனைய சிறந்த பகுதிகளோடு
ஒப்பு காணத் தக்கது. அதன் பொருள் காவியத்திற்குச் சற்றுப் புறம்பானதாயினும் அப்படலம் கம்பன்
வாக்கோ என ஐயுற வேண்டியதில்லை. ‘இரணிய வதைப் பரணி’ இப்படலத்தை அட ஒட்டயதாதலின், கம்பன்
வாக்கை ஊன்றி நோக்குவோம்.
|