கம
கம்பராமாயணத்தில் இரணியன்
வதைப் படலம்
ஓர் குரங்கினால் மறுகி மாண்ட தன் மாட்சியை எள்ளி,
மந்திர அவையில் இராவணன் இருந்துழி, கும்பகருணனும் வீடணனும் தவிர ஏனையோர் ‘ஒன்னலரை
எல்லாம் கொன்று பெயர்வோம்’ என, இராவணன் அதற்கு
இசைந்தான். இந்திரசித்து தனியே சென்று, வென்று, மீள ‘விடை ஈமோ’ எனக் கேட்டான். வீடணன்
இந்திரசித்தைக் கடியும் வகையால் இராவணன் ‘செயல் தக்கது அன்று’; ‘அணங்கை விட்டருளுதி’
எனச் சொல்லினன். இவை 28 பாடல்கள். இராவணன் சினமும்,
இகழ்ச்சியும், தான் பெற்ற வரத்திண்மையால் உண்டான செருக்கும் உணர்வை மீக்கொள, வீடணனை
இகழ்ந்து ‘நன்று போதி, நாம் எழுக’ என்றான். வீடணன், அன்பினன், மீண்டும் தடுத்து,
‘தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனித்தலைவன், உம்பர் சூழ்ச்சியின் துணிவால், மானுடன் ஆகி
வந்து அவதரித்து அமைந்தான்’ என அடி தொழுது இரந்தான்.
இந்த ‘சூழ்ச்சி’ என்ற சொல் இராவணற்கு வீடணன் பால் ஐயத்தை உண்டாக்கி, அவன் இரப்பை வீழ்த்தியது.
இராவணன், ‘இச்சைக்கு ஏற்றன யான் செய்த
இத்தனை காலம் முச்சு அற்றான் கொல் அம் முழு முதலோன்!’ ‘இந்திரன் தனை இரும் சிறை இட்டநாள்,
வானவர் உலகைச் சிந்த வென்ற நாள், சிறியன் கொல், நீ சொன்ன தேவன்?’
என அக் கடவுளை எள்ளி, முன்போரில் கடவுளர் ஊர்திகளான
ஏற்றினும் புள்ளினும், முதுகில் தைத்த வாளிகள் இன்றும் உள என நக்கான். வீடணன் கோழைத்தனத்தால்
கூறுகிறான் என இகழ்ந்து, ‘நீ போரின் எம்முடன் எழ வேண்டா; இஞ்சி மா நகர் இடம்
உடைத்து; ஈண்டு இனிது இருத்தி; அஞ்சல், அஞ்சல்’ என
அமர்த்தினான்; அருகு இருந்தவர் முகம் நோக்கி நக்கான். வஞ்சனையால், சூழ்ச்சியால், கூறுகிறானோ
என்ற ஐயம் இராவணன் மனதில் படிப்படியாக எழுந்து, ‘ஈதாகும் முன் நிகழ்ந்தது’
என இரணியன் கதையை வீடணன் சொல்லக் கேட்ட பின்பு
அவ் ஐயம் உறுதியாயிற்று,
கம்பனுடைய இரணியன் கதை முன் போந்தார் கூறியதே
எனினும் அதனுடைய அழுத்தம் வேறு. கம்பன் வற்புறுத்தியது போர் அன்று; பிரகலாதனுடைய அசையாத பக்தி;
நாராயண நாமத்தின் பெருமை.
படலத்தில 175 பாடல்கள்.
|