ப
பிரணவத்தோடு கூடிய எட்டெழுத்து மந்திரத்தை பிரகலாதன்
தனக்கு வேதம் ஓத வந்த அந்தணனிடம் உரைத்தான். ‘கெடுத்து ஒழிந்தனை’
என்று அவன் கூற, பிரகலாதன் ‘என்னை, எந்தையை,
உன்னை, உலகை உய்வித்தேன்’ எனத் தொடங்கி, ஆழ்வார்கள்
கூறிய நாம மகிமையை 8 பாடல்களால் ஒப்புவித்தான். இரணியன் பால் அந்தணன் அழைத்துச் செல்ல
அங்குப் பிரகலாதன் பிரணவம் ஒழிந்த நாராயண மந்திரம் ஓதி, ‘உன் உயிர்க்கும் என் உயிர்க்கும்
இவ் உலகத்தின் உள்ள மன்னுயிர்க்கும் ஈது உறுதி’ என மந்திரத்தின் பெருமையை 6 பாடல்களால்
வலியுறுத்தினான்.
‘இப் பேர், சொற்ற வாயையும் கருதிய
மனத்தையும் சுடும் ஒற்றை ஆணை’ இரணியனது. சொல்லையே,
செயலையே, அன்றி, மனத்தையும் சுட்டுத் தன்வழி ஆக்கும் அவன் அரசு. ஆதலின், ‘அப் பெயரை
ஆர் உரைத்தார்?, ஆரொடு கற்றது?’ எனக் கனன்றான்.
உரைத்தவர் உடன் கற்றவர், யாவரையும் பூண்டொடு அகற்றி, எண்ணத் துணிந்த மனத்தையும் பொசுக்கவேண்டும்.
“யாவரும் ஓதுவது என் பெயர்; நினைவது என் கழல்; பிறிதொரு கருத்தை நினைதல் தீது;
இதுவே நம்முள் ஒற்றுமை, நம் வலி. யான் பொய்இல் நாயகம் பூண்டனென்; கேள்வி யாவையும் தவிர்த்தனென்”
இரணியன் ‘தன்னுளே உதித்த பகை’யைக்
கொல்ல வீரரை ஏவினான். அவர்கள் பிரகலாதனைப் பலவாறு
துன்புறுத்தினர். வேழத்தின் முன் இட்டபோதும், கடலில் இட்டபோதும், மலையினின்று உருட்டியபோதும்,
ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம் ஓதுற்றான், 14 பாடல்களால். திரும்ப, தந்தைபால் கொணர்ந்தபோதும்,
3 பாடல்களால் நாராயண சப்தார்த்தத்தைச் சொன்னான்.
நரசிங்கம் தோன்றி இரணியனை முடித்தபின் பிரமன்
நரசிங்கத்தைத் துதிப்பது 5 பாடல்கள்; பிரகலாதன் துதி ஒரு பாடல். நேமிப் பெருமான் பிரகலாதனுக்கு
அருளும் வரம்: ‘உன் நாள் உலவாய், நீ என் போல் உளை’
என்பது. ‘பிரகலாதன் என்றும் வாழ்வது தொழும்புக்கே!
பாகவதத்தில் பிரகலாதன் வேண்டும் வரம் ஈண்டு இலது.
படலத்தில்
பாதி துதி. இந்த உப காவியத்தை வீடணன் போர் தொடங்கும் சூழ்நிலையில் கூறியதும், இராவணன்
கேட்டதும், கம்பனுடைய நாடகச் சுவைக்குப் பொருத்தமாக
|