இல
இல்லை என்றாலும், உப காவியத்தின் வாக்கும்
போக்கும் பல இடங்களில் இராமாயணத்தை வென்றுவிட்டது எனலாம், மகாபாரதப் போர்க்களத்தில்
கண்ணன் உரைத்த கீதையைப் போலே.
இத்தனையும் கேட்ட இராவணன் பொறுமை,
‘செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்பு’, போற்றற்கு
உரியது.
கேட்டபின், ‘தாதை யாக்கையை மாயவன்
பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் நீயுமே நிகர்’, ‘இரணியன் புதல்வன் பண்பு என, சூழ் வினை
முற்றி, யான் அவற்குத் தோற்றபின், ஏழை, நீ, என் பெருஞ் செல்வம் எய்தி, வாழவோ கருத்து?’
‘அரசின் மேல் ஆசை ஊன்றினை, வஞ்சனை மனத்தினை, நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்றரோ!’
என உருமி, முன்பே, ‘அஞ்சினை, ஆதலால் அமர்க்கும்
ஆள் அலை’ என்றவன் ‘ஒல்லை நீங்குதி’
என வீடணனை அங்கிருந்து வெருட்டினான்.
முன்பே, வீடணன் கோழை என நக்க இராவணன் இதுகாறும்
கதையைப் பொறுமையுடன் கேட்டு, தேமன் ( தேவர்கட்கு அரசன் ) பிரகலாதனுக்கு முடி சூட்டி,
‘தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ? வானவர்க்கும் நீயே இறை’
என அருளியதையும் தெரிந்தபின், தம்பியைப் பற்றி முன்
தொடங்கி இருந்த ஐயங்கள் முதிர்ந்ததில் வியப்பு என்ன?
‘இரணிய வதைப் பரணி’ எழுந்த காலத்து இலக்கியத்தில்
இக்கதை நின்ற நிலை இது. இந்நிலையில், தன் அரிய கற்பனைத் திறத்தால், பக்திக் காவியத்தைப்
போர்க் காவியமாகவும் வீர காவியமாகவும் ஆக்கினார் பரணி ஆசிரியர்.
அதை இனி
ஆராய்வோம்.
|