4
4. கோயில் பாடியது ( தாழிசைகள்
81-104 )
அப் பாலைவனத்தில் ஒரு கோயில், அதன் அடித்தலம்,
சுவர், தூண், மண்டபம், மதில் சுற்று, தீர்த்தம், பலிபீடம் பாடியபின், அங்கு ஆடும் குறை உடலங்கள்,
அரிந்த தலைகள், பைரவர், மிசிரர், யோகினி, இடாகினி, பிடாரர்களைக் கூறுகிறார். வீர ரஸம்
( பெருமிதச் சுவை ) ததும்புவது.
5. தேவியைப் பாடியது ( தாழிசைகள்
105-114 )
கோயில்கொண்டுள்ள கொற்றவையைப் பாதாதி கேசமாகப்
பாடி ‘அருளே திருமேனி,’ ‘வேதமே திருத்தொழில்’ என முடிக்கிறார்.
6. பேய்களைப் பாடியது ( தாழிசைகள்
115-133 )
தேவியை அகலாத அலகைகளைப் பாடுகிறார். பேய்கள் பல
வகையன; எனினும் அவற்றிற்கு ஒன்றே பொது: பசி. உண்டி என்பது கண்டறியாதன; பசிக்கெலாம் ஒரு
பாசனம் ஆவன. சோகத்தால் ஆய கருணா ரஸமும் ( இரக்கம் ), அருவருப்பால் ஆய பீபத்ஸரஸமும்
( இளிவரல் ) ஆங்காங்குத் தோன்றும்.
7. இந்திரஞாலம் ( தாழிசைகள்
134-148 )
தேவிக்குப் பேய்கள் தமது தொழிலைக் காட்டுகின்றன.
வட்டமிடும் கழுகுகள் நிழல்தரும் பந்தலின்கீழ் அசுரர் எலும்பால் ஆகிய ஆசனத்தில், அவர்தம்
தலைமயிர் பொதிந்த அணையிலே, ஏக நாயகி இருந்தனள். அவள் எதிரே, ஒரு பூதம் தன் மூக்கில் ஊசியை
நிறுத்தி அவ் ஊசி முனையில் பதினொரு குன்றுகளைச் சுழலவிட்டது; பின், அவ் ஊசி முனையில் பல
பிசாசுகள் விளையாடின. நாக்கிலிருந்து தொங்கிய நூல் இழையிலும், தோளில் ஏந்திய வாள் முனையிலும்,
முரசுகள் அதிர்ந்தன. இக் கோலத்துடன் சாலம் செய்யும் பேய்கள் கொடிப்படைகளுக்கு இடையில்
சுற்றி, நாட்டியம் ஆடி வந்தன. அத்புதம் ( மருட்கை ) என்ற ரஸம் இப்பகுதியில் தோன்றும்.
8. பேய் முறைப்பாடு ( தாழிசைகள்
149-161 )
இத்தொழில் முடிந்தபின், பேய்கள் தம் பசிப்பிணியைத்
தேவிக்கு விண்ணப்பம் செய்தன. ‘பாழாவான் பசியாலே எம்மைப் படைத்தான்; எல்லார்க்கும் நமன்
கூற்றம், எங்களுக்குப் பசி கூற்றம்’. ‘எம் பசி இரும்பையும் மென்று தின்னும் வலி
|