உ
உடையது.’ இம் முறைப்பாடு நமது அனுதாபத்தை ஒருபால் ஈர்த்தாலும்,
மற்றொருபால் அச்சத்தை விளைக்கிறது. ஏனெனில், பேய்களின் பசிக்கு உணவு குருதியும், நிணமும்,
மூளையும்! பயானகம் ( அச்சம் ), கருணம் ( இரக்கம் ) ரஸங்கள் பொதிந்த பகுதி.
9. காளிக்குக் கூளி கூறியது ( தாழிசைகள்
162-199 )
பேய்கள் முறையிடுங்கால், முதுபேய் ஒன்று திரிசூலியிடம்
‘விண்ணப்பம் இது கேள்’ என, இரணியனுடைய கொடுமையையும், விண்ணோர் படும் அல்லலையும், முத்தேவரும்
தம் படைத்தல் காத்தல் அழித்தல் செயல் முயலாமையையும் கூறிற்று. இத் திறல் அழிவு இரணியன்
பெற்ற வரச் செருக்காலும், படை வலியாலும் எனக் கூளி
கூற எல்லாப் பேய்களும் நடுங்கின.
10. கூளிக்குக் காளி கூறியது ( தாழிசைகள்
201-239 )
காளி ‘அஞ்சலிர்’ எனப் பேய்களுக்கு அருளி, ‘இத்துணைத்
துன்பம் உண்டானது திருமால் பாற்கடலில் பாம்பணை மேல் துயில் எழாததால், அவன் இதை உணர்ந்திலன்;
இனி அவன் எழுந்து இரணியன் உயிரைக் கவர்வான்’ என உறுதி கூறிற்று.
அப்போது ஒரு சோதிடப்பேய் உற்பாதமாகத் தான்கண்ட
நீண்டதொரு கனாவினைக் கூறிற்று. அக்கனாவில் அவுணன் படைகள் அழிவும், ஒரு நாகம் அழகுடன் நின்றாடும்
காலை, அந்நாகம் மணி ஈன்றதும், கருடன் தோன்றி நாகத்தை இருகூறு ஆக்கியதும், அம் மணியின் ஒளி
உலகெங்கும் பரவியதும் கூறும். இதன் பொருளைக் காளி விரித்து உரைத்து, அவுணன் தொலைய, அப்போர்க்களத்தே
பரணிக்கூழ் தோன்றும்; உம் குறை தீர்ந்தது என்றாள்.
இக்கனா கலிங்கத்துப் பரணியில் இலது.
பேய்க்கணங்கள் மாயனை வாழ்த்தின. அப்போது ஒரு
பேய் ஓடோடி வந்து ‘கனகன் கண் துயின்றனன்’ என்றது. பேய்கள் உவகையுடன் இரைத்தன, எழுந்தன,
விழுந்தன, கை கொட்டின, குனித்தன, அடிமிதித்தன, களித்தன.
பேய்கள் விருந்தை எதிர் பார்த்த நிலை ஹாஸ்யரஸம்
( நகைச் சுவை ) கொண்ட பகுதி.
11. திரு அவதாரம் ( தாழிசைகள்
240-438 )
அணங்கு முது பேயினை அழைத்தருளி, ‘திருமாலின் வீரத்தை
விளம்புக’ என, அப்பேய் சொல்லுவன இக்காவியத்தில் பெரும் பகுதி. காவியத்தலைவன் பிறப்பு,
வளர்ப்பு, போர் நிகழ்ந்த காரணம் யாவும் இங்கு கூறப்படும்.
|