3
3. அசுர விஜயம்:
அரசன் தானும் துய்க்காமல், தோற்றோரையும் துய்க்கவிடாமல்,
அழிவு ஒன்றையே கருதி ஆற்றும் போர்.
இரகுவின் ‘திக் விஜயம்’ அறப்போர் என்பார்
கவி.
கலிங்கத்துப் பரணி:
கலிங்க அரசன் அனந்த பதுமன் முதல்குலோத்துங்கச் சோழனுக்கு
ஈராண்டுகள் திறை செலுத்தத் தவறியதால், சோழன் வெகுண்டு, அவ் அரசனை, அவன் யானைகளுடன், சிறைப்பிடித்து
வர ஆணை இட்டான். சேனைத் தலைவன் கருணாகரன் கலிங்கம் சென்று பொருதான். அப்போரில், இடிகின்றன
மதில்; எரிகின்றன பதி; எழுகின்றன புகை; பொழில் எலாம் மடிகின்றன; குடி கெடுகின்றன. அழிந்தது
மக்கள் உழைப்பால் ஈட்டிய செல்வம்; பதிகள் எரி கொளுவி அழியச் சூறை கொண்டனர் சோழர்.
கருணாகரன் சயத்தம்பம் நாட்டிக் கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு மீண்டான்.
கலிங்க அரசன் செய்தது குற்றம் எனக் கொண்டாலும்,
அக் குற்றத்திற்காக நாடு அழிந்தது; பலர் துன்புற்றனர்.
சயங்கொண்டார் வாக்காக, கருணாகரன் இட்ட
போர் பெரும்பான்மை ‘அசுர விஜயம்’, சிறுபான்மை ‘லோப விஜயம்’.
எனினும், அரிய கற்பனைகள், சொல் ஆட்சி, கவி நயம்,
இவற்றால் புகழ் பெற்றது இக் காவியம். இதைப் பாடியவனுக்கு, அக்காலத்திருந்த அரசு ‘கவிச் சக்ரவர்த்திப்’
பட்டத்தைத் தந்தது. ஒவ்வோர் தாழிசைக்கும் ஒரு பொன் தேங்காயை அரசனும், பின்னர் மும்மணிகள்
பதித்த மற்றோர் தேங்காயை அரசியும் உருட்டியதாகவும் கதைகள் கூறும்.
தக்க யாகப் பரணி:
வேத யக்ஞம் ஓர் கூட்டு முயற்சி: ஒரு குலத்தோர் உடன்
கூடித் தம் வாழ்க்கை உயர்வதற்கு ஆற்றுவது. ‘குடி செய்வல்’ என்று எழுந்த தக்கனுடைய முயற்சியை,
‘தெய்வம் மடிதற்று முந்துறாது, ‘வெறுமே’யும் இராது ( ‘வெறுமே’ என்ற சொல் இப்பரணியில் பலகாலும்
பயில்வது ) அழிக்கவே முற்பட்டது ஏன்? உமாதேவியையும் தன்னையும் இகழ்ந்த தக்கன் செயலைச்
சிவபெருமான் பொறுக்கொணாமையே; மற்றொரு ‘குற்றம்’ அக் காலத்திருந்த சாத்திர மரபை விட்டு
வேறொரு சாத்திர மரபைப் பின்பற்றி தக்கன் வேள்வியைத் தொடங்கியது. இவ்அழிவு
|