New Page 1
‘அசுர விஜயம்’.
வேள்வி என்ற கூட்டு முயற்சி எவர்க்கும் பயன்படாமல்
போயிற்று. யாக அழிவைப் பாடும் பரணி, ஏனைய பெருமைகள் பெற்றும் புலவர் கையாளளில் சிறக்கவில்லை.
பாச, அஞ்ஞ, மோக வதைப் பரணிகள்
:
இவை அறிவுக்கு இவ் இயல்புகள் தோற்றமையைப் பாடும் தொடர்
உருவங்கள் ( Allegories ).
இரணிய வதைப் பரணி :
இதைச் சற்று விரிவாக ஆராய்வோம்.
இதிகாச புராணங்களும், பரிபாடலும், திருமால்
சிங்கப்பிரானாகத் தோன்றி இரணியனை அழித்தமைக்குப் பல காரணங்களைக் கூறுகின்றன:
1. தேவர்களை அவரவர் இடங்களின்று ஓட்டிவிட்டு
அவர் தொழில்களையும், அவியையும், முறையே தன் தொழிலாகவும் உரிமையாகவும் இரணியன் கொண்டது;
2. இரணியன் வர்ணாச்ரம தர்மம், யாகம், இவற்றை
எவரும் செய்ய ஒண்ணாமல் தடுத்து, தன் இறைமையை ஏற்காதவரைத் துன்புறுத்தியது;
3. பிரகலாதனுடைய சலியாத பக்தியை எடுத்துக்காட்டி,
‘நாராயணன் எங்கும் உளன்’ என்ற அவன் சொல்லை நிரூபிப்பது;
4. திருமால் தன் அடியானுக்கு உண்டான இகழ்ச்சிகளைப்
பொறாதது: அவனைக் காக்கும் கடமையைப் பூண்டது.
ஆழ்வார்கள் கூறும் காரணம் வேறு. “சரண் தா” என்று
அமரர் இரப்ப, அவர்களுக்கு அருளியது. பிரகலாதன் கதை ஒரு வியாஜ மாத்திரமே.
கம்பன்
இரணியனுடைய
‘ஒற்றை ஆணை’ யை ஏற்க மறுத்த மகனைப் பெருந் துன்பங்களுக்கு உள்ளாக்கியதையும், அவனைக்
கொல்வேன் என்று உடன்று எழுந்தபோது மகன் ‘தொட்ட தொட்ட இடந்தொறும்’ நாராயணன்
‘தோன்றுவான்’ என்ற உறுதியை நிலைநாட்டியதும், நாராயண நாம மகிமையை விளக்கி அதன் பொருள்
உண்மையைக் காட்டியதையும் இரணிய வதைக்குக் காரணமாகக் கூறுவார்.
|