இரணிய வதைப் பரணி

32

7

7. சில நயங்கள்

    இப் பரணி ஆசிரியருடைய கவிதைத் திறன் பல இடங்களில் விளங்கும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்:-

தாழிசை     77. பிரமன் ஆகாயத்தில் கங்கையாற்றைப் படைத்தது இப்பாலை

          நிலத்தின் வெம்மையை அஞ்சியே.

  “       78. உலகில் ஆறுகள் ஏன் ஓடுகின்றன? கடல் ஏன் குழியில்

விழுந்தது? இப்பாலை நிலத்தின் வெம்மையை ஆற்றாமல்.

  “       79. உலகத்தை எல்லாம் உண்ட திருமால் ஏன் அதை மீள

          உமிழ்ந்தான்? இப்பாலைவனத்தின் வெம்மை பொறாமல்.

  “       80. சிவபெருமானுடைய பாதங்கள் சிவந்தது ஆடியதால் அன்று;

          இந்தப் பாலைவனத்திலுள்ள துர்க்கையைத் தேடி நடந்து

     சென்றதால்.

  “       123. பிள்ளை பசியால் வற்றிய முலையைப் பிடித்திருக்கத்

     தாய்ப்பேய் தன்னையும் பிள்ளையையும் காக்க முடியாமல் சூல்

          செய்த தன் கண்வன் பேயை முறைத்துப் பார்த்துத் தன் நாக்கைக்

          கடிக்கும்.

  “       352-4. பிரகலாதனை இரணியன் கொடுமைப் படுத்த, அதைப்

     பொறாது ஆகாயம் அழுதது. அவ் அழுகையே இன்றளவும்

     ஆறாக ஓடுகிறது. குன்று அழுதது; அவ்வழுகையே இன்றளவும்

     அருவியாக வீழ்கிறது.

  “       565. நரசிங்கம் இரணியனுடைய தாள் இரண்டையும் பிடித்துச்

     சுழற்றியது. அந்தச் சுழல் விசையால் இன்று வரை சூரியனும்

          சந்திரனும் உலகத்தைச் சுற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

  “       566. இரணியன் அன்று கக்கிய இரத்தமே அண்ட கோளத்துக்கு

          அப்பால் உள்ள மலையில் தோய்ந்து இன்று நமக்குக் காலையிலும்

          மாலையிலும் செந்நிறமாகத் தெரிகிறது.

  “       620. கலிங்கத்துப்பரணியில் பிரிந்த தலைவி கொழுநன் தன் முலை

          மீது வைத்த நகக்குறியை யாரும் இல்லாத இடத்தில் ஆடையை

     நீக்கி கண்ணுற்று மனம்