இரணிய வதைப் பரணி

33

கள

        களிப்பாள் என்ற கடை திறப்பில் ஆசிரியர் வைத்துள்ளார். இக்
        காவியத்தில், அவலச் சுவையின் உச்சியில் செருத்தொழில் அறியா
        இளைஞன் ஒருவன் ஆற்றிய முதல் போரிலேயே நரசிங்கம்
        அவனைப் பொருது வீழ்த்த அவன் உடலைத் தேடிக் கண்ட
        பெண் ஒருத்தி முன் நாளில் அவன் மார்பில் பதித்த தன் நகக்
        குறியைக் கண்டு கண்ணீர் உகுப்பாள் என வரும்.

    பேய்களின் வகை, அவற்றின் நாட்டிய வகை, குதிரை நடை வகை இவற்றை ஆசிரியர் பலவகைச் சந்தங்களில் அமைத்துள்ளார். நரசிங்கம் தூணிலிருந்து தோன்றியதும், இரணியனுடைய வீரப் பேச்சும், போர் பாடியதும் படிக்கப் படிக்கப் பொருளின்படி ஓசை செல்லுமாறு அமைந்துள்ளது.

    வைணவ மரபுக்கு ஏற்ப, பிரகலாதன் எட்டெழுத்தை ஆசிரியனிடம் கூறும் போது பிரணவத்துடனும் ( தாழிசைகள் 311-313 ) அரசவையில் கூறும்போது பிரணவம் ஒழித்தும் ( தாழிசை 324 ) சொல்லுகிறான். கம்பரும் இதே முறையைக் கையாண்டுள்ளார். ( படலச் செய்யுட்கள் 23, 43 )

    சேனை முதல் நாதன் திரு வைகுண்டத்துக்குக் காவல் பேணியதாக ஆசிரியர் கூறுவது ( தாழிசை 15 ) ‘விஷ்வக்ஸேநே ந்யஸ்த ஸமஸ்த ஆத்மைச்வரியம்’ என்ற இராமானுசருடைய கத்யப் பகுதியை ஆதாரமாகக் கொண்டது. ‘நாகணையின் மேவு’ என்ற ( தாழிசை 28 ) பகுதி இராமாநுஜர் திருவனந்தாழ்வானின் அவதாரம் என்பதைக் குறிக்கும். ‘தான குணம்’அவர் திருமந்திரத்தை உலகறிய அறைந்த உதார குணம்.

    இந்திர ஞாலம் என்ற நூல் பகுதி இந்திரசாலம் எனவும் வழங்குகிறது: ஆழ்வார் “இந்திர ஞாலங்கள் காட்டி,” ( திருவாய் மொழி 9. 5. 5 ) என்ற பாடத்தை ஒட்டிக்கொள்ளப்பட்டது.