இரணிய வதைப் பரணி

34

8

8. இந்நூலில் பயிலும் சுவைகள்

    “ரஸம்” என ஸம்ஸ்க்ருத மொழியிலும் வழங்கப்படுவன ஒன்பது வகைப்படும். அவை அனைத்தும் இந்நூலிற் பயிலும்.

    1. காமம் ( அல்லது ) சிருங்காரம்: கடை திறப்பு ( தாழிசைகள் 31-55 ) அமராபதியினின்று திரும்பிய இரணியன் சுகந்த மாலையுடன் இன்ப நுகர்வு (265-278).

    2. அவலம் (அல்லது கருணம்: பேய்களின் பசிக் கொடுமை (தாழிசைகள் (118, 119, 122, 123, 152-5), தேவர் நிலை (163-4), பிரகலாதனைச் செய்த கொடுமை பொறாது மாதர் அரற்றல் (352-4) களத்தில் கன்னிப் போரிலே பட்ட வீரனைக் கண்ட மங்கையர் (619, 620).

    3. பெருமிதம் (அல்லது) வீரம்: காளி கோயிலில் தேவியைச் சூழ்ந்த வீரர் (தாழிசைகள் (92-97), இரணியன் நரசிங்கத்தை அறை கூவல் (485-448).

    4. வெகுளி (அல்லது) ரௌத்ரம்: இரணியன் பிரகலாதனிடம் கொண்ட சினம் (தாழிசைகள் (325-227), நரசிங்கத் தோற்றமும் செயலும் (449-467), (562-584).

    5. நகை (அல்லது) ஹாஸ்யம்: ‘கனகன் கண் துயின்றனன்’ எனக் கேட்ட பேய்களின் செயல் (தாழிசைகள் 229, 235-338)

    6. அச்சம் (அல்லது) பயானகம்: பிரகலாதன் நாராயண நாமம் ஓத அந்தணன் செயல் ( தாழிசைகள் 317, 328), நரசிங்கத்தைக் கண்ட ஊரார் செயல் (428-431).

    7. இளிவரல் (அல்லது) பீபத்ஸம்: காளி கோயில் பிரகாரம் (தாழிசைகள் 95-6), களக்காட்சி (617, 621-623).

    8. மருட்கை (அல்லது) அத்புதம்: இந்திரஞாலம் பயிலும் பேய்ச் செயல் (தாழிசைகள் 141-148), சொல்லினும் நாராயணன் உளன் எனப் பேய் வியந்தது (652)

    9. அமைதி (அல்லது) சாந்தம்: இரணியன் வெகுளியைத் தாங்கி பிரகலாதன் சலியாது நின்ற நிலை (தாழிசைகள் 340-45, 421-5), நரசிங்கத்தின் ஆறிய பேச்சும் செயலும் ( 590-1, 602-605).