வழக
வழக்குச் சொற்கள்:
ஆசிரியர் தம் கருத்தை ஊன்ற வைக்க, பல வழக்குச்
சொற்களையும் பொருள் ஊட்டும் சொல் தொடர்களையும் ஆங்காங்கு அமைத்து உள்ளார்.
அகம்படி (442), அது கிடக்க (338, 474), அது நிற்க
(141), ஆகபோக (232), இருப்பு அசிக்கும் பசி (161), ஈர்ச்சுவிட்டு (675), உயிர் தளம்பி
(317), ஒரு மிடா ஒரு வாயாக உண்டு (673), கடகழி (349), கருவி கட்டினன் (357), காவணம்
(135, 633), கைவலிப்பு (674), திடுக்கெனத் தேக்கும் இட்டு (678), திரிய (மீள) (32), செய்யவேண்டி
(2), செருக்கினை நெருக்கி நின்று (681), செவி எலாம் திறக்க உண்டு (676), நந்தவானம்
(88), பசிக்கு ஒரு பாசனம் (122), பட்ட பட்டினி (122), பலவிசை (437) பலுகுதல் (176),
பாழாவான் (154), பாழ் கிடக்கும் பெரு வயிறு (230), வயிரப்பதம் (664), வயிறு எரிய (548),
வேடை (268).
சொல்லாட்சி
“அடங்க”, “அடங்கலும்”, “அடைய” என்ற சொற்கள்
“முழுவதும்” என்ற பொருளில் 41 இடங்களில் இந்நூலில் பயின்றுள்ளன. “எனை” என்ற சொல் “பல”
என்ற பொருளில் 7 இடங்களில் பயின்றுள்ளது.
அணிகள்
திரிபு, மடக்கு, யமகம் என சொல் அணிகள் பல: பங்கயம்-அக்கயம்-ஒரு
கயம் (1), நல்லசுரர்-வல் அசுரர் (3), வலம் புரியை நலம்புரிந்து (3), ஊசலாட விழி பூசலாட
உறவாடும் (44), தாமம் கிடந்த தாம் அங்கு கிடந்த (59), உழைக்குலம் பல உழைக்கும் (74),
தடித்தென நடித்து (147), ஆழியான் மருவும் ஆழி (211), கண்டகன் ஆவிநலம்-கண்ட கனாவின் நலம்
(239), தாரணி-தார் அணி (299), மான் இடம்-மானிடம் (471).
சொற்பின் வரும் நிலையணியை 296, 331-ல் காணலாம்.
உவமம்: 3, 5,
12, 33, 34, 35, 42, 46, 50, 53, 65, 68, 69, 73, 79, 81, 96, 101, 104, 107, 109,
111, 116, 117, 119, 120, 121, 128, 132, 163, 171, 192, 205, 208, 209, 218, 219,
224, 234, 276, 277, 302, 309, 319, 325, 365, 367, 391, 392, 405, 423, 432, 462,
475, 476, 478, 482, 486, 487, 491, 492, 496, 502, 517, 529, 532, 536, 547, 555,
557, 615, 616, 617, 622, 633, 668.
|