10 இந
10 இந்நூலில் கூறப்பட்டுள்ளன
ஆயுதங்கள் :
அங்குசம், அரம், எழு, கடகம் ( கடகு ), கதை, கப்பணம்,
கரடிக்கோல், கலப்பை, கழு, குந்தம், குலிசம், கொழு, சங்கு, சிலை, சூலம், சொட்டை, தண்டு, திகிரி,
தோமரம், நெட்டை, பகழி, பத்திரம், பட்டம், பரசு, பரிகை ( பரிகம் ), பரிசை, பாசம், பிண்டி
பாலம், மழு, முத்கரம், வச்சிரம், வலையம், வளை, வாள்.
ஆக 34.
காளியின் பெயர்கள் :
அணங்கு, அமரி, எம்மை ஆளுடைய அம்மை, ஏக நாயகி, குமரி,
கொற்றவை, நாயகி, திரிசூலி, தேவி, பகை தணிவாள், பயிரவி, பெண்ணின் அருங்கலம், மடந்தை.
ஆக. 13.
காளியின் பரிசனங்கள் :
அலகை, இடாகினியர், குறள், கூளியர், கொற்றியர், பசாசு,
பிடாரர், பூதம், பேய், பைரவர்,
ஆக 10 வகையினர்.
காளியின் ஆயுதங்கள் :
எட்டு. அவற்றுள் இடபால் சங்கமும் வடபால் சக்கரமும்;
திருமாலுக்கு உரிய சங்கு, சக்கரம், வில், வாள், கதை என்ற ஐந்தும் அவளுக்கும் உண்டு.
காளியின் செயல்கள் :
கொக்கு இறகு, ஒற்றைப் பிறை அணிந்திருப்பாள்;
பாம்புகள் பயிலும் செஞ்சடையினள்; கணவனோடு பலி இரப்பாள்; குருதிப் பொட்டு இடுவாள்.
திருமாலின் திருநாமங்கள் :
அகல் பகுவாய் நரசிங்கம், அம்பு ராசியில் விரும்பினன்
துயில் அநந்த போக சயனத்தின் மேவு எம்பிரான், அமரர் தம்பிரான், அமலன், அய்யன், அரங்கனார்,
( துரங்க வீரர் அரங்கனார், அரங்கர், அம்புனல் அரங்கர், அலையும் புனல்சூழ் அரங்கர், அழகானை
மேல் வரும் அரங்கர், அழகிய அரங்கர், சோலை அரங்கர், தென் அரங்கர், பெருமாள் அரங்கர்)
அரி உருவம் ( அமளி அரவணையில் அரி, பைங்கட் சின அரி, மறை புகழ்கையுறு அரி ) அருவம், அறவன்,
அறிவார் அறிதற்கு அரிதானவன், அனிலம், அனலம், ஆமை வடிவான நாயகன், ஆரண காரணன், ஆழி அங்கையன்,
ஆழியான், இரண்டுருவில் திரு உருவாய் வந்து தோன்றும் எங்கள் பிரான், இரணியனைக் கொல்லும்
பெருமான், இறையோன், இறைவன், ஈசன், உருவம், உலகு ஏழையும் உண்டவன், மீள உமிழ்ந்தவன், எண்
பொருள் நாயகன், எம்பிரான், என்றும் எங்கும் உளன் என்ற இறை, ஏக சராசரன், ஏனம் ஒன்றென
எழுந்து வந்து எம் ஐயன் ஆவி உண்டவன்.
|