11
11. நூல் ஆசிரியர்
முற்காலத் தமிழிக் கவிஞர் தாம் இயற்றிய நூல்களில் தம்மைப் பற்றிய குறிப்பு எதையும் பொதிந்து வைக்கவில்லை என்ற மரபுக்கு இந்நூல் ஆசிரியர் விலக்கு
அன்று.
பரணி ஆசிரியர்களுள் சயங்கொண்டார் பாட்டுடைத்
தலைவனையும் சோழ பாரம்பரியத்தையும் கூறினார்; ஒட்டக்கூத்தர் ஆக்குவித்தானை வாழ்த்தினார்.
இந்நூல் ஆசிரியர் தம்மைப் பற்றியோ, ஆக்குவித்தானைப் பற்றியோ எதுவும் கூறவில்லை.
கடவுள் வாழ்த்திலும், பேய்கள் பரணிக் கூழ் குடித்துப்
பாடும் பகுதியிலும் அரங்கரைப் பற்றியும் வளவனைப் பற்றியும் உள்ள குறிப்புக்கள் ஆசிரியர்
சோழ நாட்டார் என்பதை உணர்த்தலாம். ஆசிரியருடைய சொல் ஆட்சியையும் அவர் கையாண்ட வழக்குச்
சொற்களையும் கொண்டு அவர் தமிழ் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தார் என ஒருவாறு யூகிக்கலாம்;
எனினும் 12, 13-ம் நூற்றாண்டுகளில் எப் பகுதிகளில் இச் சொற்கள் வழக்கில் இருந்தன எனக்
கூறுவதற்கு இப்போது போதிய சான்று இல்லை.
பிற்காலத்தில் எழுந்த மண்டலச் சதகங்களில் இந்
நூலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
12. நூல் எழுந்த காலம்
நூலாசிரியர் திருவரங்கத்தைப் பல தாழிசைகளில்
போற்றியுள்ளார். 16, 18, 21, 46, 47, 48, 53, 57, 690, 691 காண்க. ‘வடதிருக்
கோபுரம்’ 20, 689-ம் தாழிசைகளில் பாடப்பட்டுள்ளது. அக்கோபுரம் திருவரங்கத்தில் மேட்டழகிய
சிங்கர் சந்நிதி ஆகலாம். அச்சந்நிதியின் அமைப்பே கோபுர வடிவானது. அக்கோபுரத்துக்கு எதிரில்
உள்ள மண்டபத்தில் கம்பர் இராமாயணம் அரங்கேற்றம் செய்ததாகவும், இரணியன் வதைப் படலம் கேட்டபோது
அழகிய சிங்கர் தலையும் கையும் ஆட்டி மகிழ்ந்ததாகவும் கேள்வி வாயிலாகக் கதை உள்ளது.
பெயர் குறிப்பிடாத வளவன் ஒருவனை 30-ம் தாழிசையில்
கூறி, அவன் ‘கவிகை நிழலில் உலகு வளர்க’ என்பது சோழப் பேரரசு ஓய்ந்த கி. பி. 1279-க்கு
முன்பே இந்நூல் எழுந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். ‘ஞானதவராசன்’ என்ற
|