இரணிய வதைப் பரணி

40

இர

இராமாநுசன் பெருமை கூறியதாலும் பல இடங்களில் கம்பரைப் பின்பற்றியுள்ளமையாலும் இராமாநுசருக்கும், கம்பருக்கும் பிற்பட்டவர் இவ் ஆசிரியர். கம்பன் காலத்தைப் பற்றிக் கருத்து வேற்றுமை ஊன்றி உள்ளமையால் அவரை விட்டு விட்டாலும், இராமாநுசர் வாழ்ந்த கி. பி. 1137-க்குப் பிற்பட்டது இந்நூல்.

    இந்த 142 ஆண்டுகளுக்குள் இருந்த சோழ மன்னர் யாவர்?     இரண்டாம் இராசராசன் ( 1146-1173 ) தன் முன்னோர் சிலரால் அநாதரவு செய்யப்பட்டு வந்த வைணவ சமயத்தை மீண்டும் தன்னிலை உறச் செய்தான்: “விழுந்த அரி சமயத்தை மீள வெடுத்து” என்பது அவன் மெய்க்கீர்த்தி. ராஜாதிராஜன் ( 1173-1178 ) ‘தில்லைச் சிற்றம்பலவருக்கு ஏக பக்தன்’ என அவன் மெய்க்கீர்த்தி கூறும்; மறந்தும் சிவபெருமானை அன்றிப் புறந்தொழா மன்னன்.

    அவனுடைய மகன் மூன்றாம் குலோத்துங்கன் ( 1178-1216 ) காலத்தில் ‘குலோத்துங்க விண்ணகரம்’ என்ற விஷ்ணுகோயில் ஒன்று ஏற்பட்டது ( 1181 ) : அவன் 1199-ம் ஆண்டில் திருப்பருத்தித்துறை சைன ஆலயத்துக்கும் 20 வேலி நிலம் தானமாகத் தந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. பல மதங்கள் தழைத்த காலம் அது. மேலும், அவன் திரிபுவனம் கோயிலைப் புதுப்பித்துப் பெருக்கித் தன்னைத் ‘திரிபுவன சக்ரவர்த்தி’ என்று அழைத்துக் கொண்டான். இவை திருவாளர் மு. அருணாசலம் குறிப்பிட்டவை.

    அக்கோயிலில், ‘சரபம்’ ஒன்றை அவ்வரசன் ப்ரதிஷ்டை செய்தானாம். அது எட்டுக் கால்களை உடைய பறவை. ( ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ஸரப: என்பது 356-வது பெயர்: அழியும் உடலில் சுடர் விளங்கும் உயிர் என்பது பொருள். ) சரபம் நரசிங்கத்தை வென்றதாகக் கோயில் கட்டியபின் உண்டான அவ்வூர்ப் புராணம் கூறுகிறது. நரசிங்கத்தின் பெருமையை நிலை நாட்டும் கருத்து, இவ் ஆசிரியரை இந்நூல் இயற்றுவதற்கு ஊக்கியிருக்கலாம்.

    கம்பராமாயண அரங்கேற்றம் கி. பி. 1185-ல் நிகழ்ந்ததாக ஆதாரங்களுடன் பரவலாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

    இவற்றை எல்லாம் பார்க்குமிடத்து, 12-ம் நூற்றாண்டின் இறுதியிலோ, 13-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ இந்நூல் தோன்றி இருக்கலாம் என எண்ண இடமுண்டு.