வழக
வழக்கமான கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், ‘கடைதிறப்பு’ப்
பகுதியுடன் காவியம் தொடங்குகிறது. ஆனால் காவியத்தின் முக்கிய நிகழ்ச்சியோ போர்; பரணிக்கூழ்.
அந்தப் போர் எங்கு நிகழ்ந்தது? யாரிடை நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? அதன் முடிவு என்ன? பரணிக்கூழ்
எத்தகையது? எவர் உண்டனர்? என நம் சிந்தனையைத் தூண்டும் முறையில் காவியம் அமைந்துள்ளது.
கடவுள் வாழ்த்து, தமிழ்க் காவியங்களுக்குப்
பொதுவான பகுதி. பாட்டுடைத் தலைவன் வாழ வேண்டும், பாடுவித்தான் வாழவேண்டும், அரசன் வாழவேண்டும்,
மழை பெய்யவேண்டும். நாடு செழிக்கவேண்டும், ஒழுக்கம் சிறக்கவேண்டும் எனப் பல கடவுளரைப்
போற்றுவார் ஆசிரியர்.
இனி, நூல் தொடங்கும். போரில் வென்ற வீரர்
வாகை சூடி மீளுங்கால், கதவைத் திறந்து அவரை வரவேற்குமாறு, அவருடைய வெற்றி விழாவில் பங்கு
கொள்ளுமாறு, பெண்களுக்குப் புலவரோ வேறு பெண்டிரோ கூறுவதாக அடுத்த பகுதி அமையும். பல வகைப் பெண்கள்,
அவர்தம் மென்மை, காதலரின் வீரம், புலவி கலவி நுணுக்கம், இரு பொருள்படப் பேசி வேட்கையைத்
தூண்டுதல் யாவும் இப்பகுதியின் சிறப்பு.
“எந்தப் போர்?” என்ற வினா எழுவது இயற்கை. அவ்வினாவிற்கு
விடைகாணச் சில பகுதிகளைக் கடந்து செல்லவேண்டும். கூழ் உண்டவை பசியால் வருந்திய பேய்கள்,
அப்பேய்களுடன் கொற்றவை உறையும் காட்டையும், அவளுடைய கோயிலையும், அங்குள்ள பரிவாரத்தினரையும்,
பலவகைப் பேய்களையும் பாடி, தேவியின் திரு உருவையும், திரு ஓலக்கத்தையும் பாடும் பகுதிகள் தொடர்ந்து
வரும். திரு ஓலக்கத்தில் சில பேய்கள் தம் சால வித்தையைப் பயிலும். பல பேய்கள் தம் பசிப்
பிணியை விண்ணப்பம் செய்யும். எங்கு போர் நிகழுமோ, எங்கு அழிவு உண்டாகுமோ என ஏங்கிக் கிடப்பன
அப்பேய்கள். அவ் ஏக்கத்திடையில், ஒரு முதுகூளிப்பேய் வந்து எங்கோ ஒரு போர் நிகழ்ந்தது
எனக் கூறக் கேட்ட பேய்க் கணங்கள் மகிழ்ந்து கூத்தாடும்.
தேவி கை அமர்த்தி அந்த முதுபேயினைப் ‘போர் நிகழ்ச்சியைக்
கூறுக’ எனப் பணிக்க, அப்பேய் அப்போருக்குக் காரணமானவன், போர்த்தலைவன், பிறந்து வளர்ந்ததையும்,
நடந்த போர் இத்தன்மையது எனவும் கூறும். கேட்ட காளியும் பேய்களும் போர்க்களம் காணச் செல்லும்.
அங்குள்ள குருதி ஆற்றில் நீராடி, பிணக்
|