இரணிய வதைப் பரணி

5

New Page 1

குன்றுகளில் விளையாடி, நிணத்துகில் புனைந்து, தசை, மூளை முதலியவற்றைக் கொண்டு கூழ் அட்டு ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு, கொற்றவையின் புகழையும் போர் தந்தவன் புகழையும் பாடி, வாழ்த்துவதோடு காவியம் முடிவுறும்.

    ஆக, காவியத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாகிய போரையும் பரணிக் கூழையும் கூறுவதற்கு ஆசிரியர் தம் நூலை நான்கு பகுதிகளாக வகுத்துக் கொள்வார். முதல் பகுதி கடவுள் வாழ்த்தும் மகளிர் கடை திறப்பும்; இரண்டாம் பகுதி காளியும், பேய்களும்; மூன்றாம் பகுதி போர்த் தலைவரும், போரும்; நான்காம் பகுதி மீண்டும் காளியும், பேய்களும் களம் கண்டு, கூழ் அட்டு, இடுதல். இவ்வமைப்பு எல்லாப் பரணிகளுக்கும் பொது, இரணிய வதைப் பரணியின் சிறப்பு மேலே கூறப்படுகின்றது.