இரணிய வதைப் பரணி

42

அவர

அவர் ஏட்டிலிருந்து எழுதி, அச்சில் பதிப்பித்தவை: மாறன் அகப் பொருள், திருப்பதிக் கோவை, ஆண்டாள் பிள்ளைத் தமிழ், ( அடியேனுக்கு இந்நூலை மறுபடியும் பதிப்பிக்கும் பேறு வாய்த்தது. ) ஆண்டாள் சந்திரகலா மாலை, அழகர் கிள்ளை விடு தூது, நவதீதப்பாட்டியல், மாறன் கோவை, திருவேங்கட உலா, இராமஜயத் திருப்புகழ் என்பன. அவர்தம் இளமையிலேயே 1914-ல் காலமாகிவிட்டதால் அவர் எழுதிவைத்திருந்த பிற நூல்கள் அச்சாகாமல் போயின.

    அதன் பின்பு, மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ மாத இதழில் 1915 முதல் 1917 வரை அப்போது சங்கத்தில் ஆசிரியராக இருந்த சு. நல்லசிவன் பிள்ளை அவர்களால் இந்நூல் வெளியிடப்பட்டது. அவர் “இது, மதுரைத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த பாண்டியன் புத்தக சாலையில் இதுவரை அச்சுக்கு வராத தமிழ் நூல்களுட் பரிசோதிக்க இயலாது ஒரே பிரதியாயேட்டிற் சிதைவடைந்து இருப்பதால் அதன் சொரூபமழியாது பாதுகாக்கக் கருதி இருந்தபடியே வெளியிடப்படுகிறது” என்று அவ்வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் நூலகத்தில் ஒரு காகிதப் பிரதி உள்ளது. மற்றொரு காகிதப் பிரதியை ஆழ்வார் திருநகரி பெரியன் சீனிவாச ஐயங்கார் போற்றி வைத்திருந்ததாகவும், அவர் வெளியிடுவதற்கெனக் குறிப்புகள் சேகரித்தும் எக்காரணத்தாலோ வெளியிடவில்லை என்றும் தெரிகிறது; பெரியன் திருமாளிகையில் அப்பிரதியும் குறிப்புக்களும் கிடைத்தில. அக்காகிதப் பிரதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்த மூல ஏட்டைக் கொண்டு எழுதப்பட்டதென, செந்தமிழ் உதவிப் பத்திராதிபர் ஆகவும், கல்லூரி ஆசிரியராகவும் இருந்த மூல ஏட்டைக் கொண்டு எழுதப்பட்டதென செந்தமிழ் தவிப் பத்திராதிபர் ஆகவும், கல்லூரி ஆசிரியராகவும் இருந்த முதுபெரும் புலவர் திரு. இராமநுச ஐயங்கார் அடியேனுக்கு அறிவித்தார். அது கொண்டு, மேலும் ஏடு, பிரதி தேடும் முயற்சியைக் கைவிட்டேன். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்த ஒரே ஏட்டுப் பிரதியும் அண்மையில் அழிந்தது.

    மூலத்தைப்பார்க்குங்கால், பல விளங்கா நிலைகள் உண்டாயின. சில இடங்களில் முழுத்தாழிசைகளையே காணவில்லை, சில இடங்களில் முதல் இடை ஈறுகளில் ஒன்றோ இரண்டோ கெட்டிருந்தது; சில இடங்களில் எழுத்துக்கள் வீடுற்றன; சில இடங்களில் சீர்களும் அசைகளும் குறைந்தன; சில இடங்களில் தாழிசைகள் முறை பிறழ்ந்தன போலத்தோன்றின; சில இடங்களில் ஒற்றுக்களைக் காணவில்லை, கொம்புகளைக் காணவில்லை, கால்களைக் காணவில்லை.