பற
பற்றி நிற்பதும், புதிதாக இந்நூலில் காண்கிறோம்.
தூணை இரணியன் கையால் புடைக்க அதனின்று நரசிங்கம் வெளிப்பட்டு இரணியனைக் கொல்கிறது. பிரமன்,
சிவன், இந்திரன், ருஷிகள் பலரும் நரசிங்கத்தைப் போற்றுகின்றனர். இறுதியில் ஒரு சருக்கம்
முழுவதும் பிரகலாதன் நரசிங்கத்தைப் போற்றுவதாகப் புராணம் முடிகிறது.
இவ் ஒன்பது சருக்கங்களில் நீரோட்டமாக அமையும்
கருத்து இதுவே:
மன்யே தந, அபிஜந, ரூப, தப,
ச்ருத, ஓஜ, தேஜ,
ப்ரபாவ, பௌருஷ, புத்தி,
யோகா:
ந ஆராதநாய ஹி பவந்தி
பரஸ்ய பும்ஸோ பக்த்யா
துதோஷ பகவான் கஜ யூதபாய
( 9 : 9 ).
ந தாநம் ந தபோ ந இஜ்யா
ந சௌசம் ந வ்ரதாநிச
ப்ரீயதே அமலயா பக்த்யா
ஹரி அந்யத் விடம்பனம்.
( 7 : 53 )
“நான் கருதுவது: செல்வம், குடிப்பிறப்பு, அழகு, தவம்,
கேள்வி, ஊக்கம், ஒளி, தலைமை, ஆண்மை, அறிவு, முயற்சி - இவையாவும் பரம் பொருளை மகிழ்விக்கா.
பக்தி ஒன்றாலே, பகவான் யானைக்கூட்டத் தலைவனாகத் தோன்றுவான்”
“ஈகை, தவம், வேள்வி, தூய்மை, எளிய வாழ்க்கை,
இவற்றை அன்று; களங்கம் அற்ற பக்தி ஒன்றையே திருமால் விரும்புகிறான்; பிற யாவும் பகட்டு.”
புராணரத்நம் எனப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில்
இக்கதை பெரும்பாலும் பாகவதத்தை ஒட்டிக் கூறப்படுகிறது.
பிரமனுடைய வரத்தால் இரணியன் பல ஆயுதங்களாலும் பல பிறப்பினராலும் கொல்லப்படாதவன்; எனினும்,
பிரமனுடைய சாபத்தால் ஸ்ரீஹரியிடம் தீராத வெறுப்புக் கொண்டவன். அவன் தன் ஆணையை மறுத்த மகன்
பிரகலாதனைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கினான்; ஆனால், மகனோ ஒவ்வொரு முறையும் விஷ்ணுவைத் தியானம்
செய்து அவற்றினின்றும் தப்பினான். இறுதியில், பிரகலாதனுடைய பகவத் பக்தியைப் பொறுக்கமாட்டாது,
இரணியன் அவனைக் கொல்ல முற்பட்டபோது, ஸ்ரீஹரி நரசிங்க வடிவில் தூணிலிருந்து தோன்றி இரணியனைக்
கொன்றார். புராணத்தின் இப்பகுதியில் துதிகளே மிகும். பிரகலாதனை ‘உனக்கு என்ன வரம் வேண்டு’மென
ஹரி
கேட்க, அவன் தன்
|