இரணிய வதைப் பரணி

9

தந

தந்தையின் பாவங்கள் அனைத்தும் அற்றுப் போகுமாறு அநுக்ரஹிக்க வேண்டுமென்று பகைவனுக்கு அருளக் கேட்பது போற்றற்கு உரியது. பிரமனுடைய சாபமும், பிரகலாதனுடைய வேண்டுதலும் இங்குப் புதுக் கருத்துக்கள்.

    ஸம்ஸ்க்ருத மொழியில் பல காவியங்கள் தோன்றியும் இவ் அருமையான நாடகத்தன்மை நிறைந்த பகுதியை எவருமே கையாளாதது வியப்பே. இராமாயண மகாபாரதங்களில் சின்னஞ் சிறு பாத்திரங்களையும், சம்பவங்களையும் தம் கற்பனாசக்தியால் சிறப்பித்துக் காட்டியுள்ளனர் பாஸன், காளிதாசன், பாரவி, நாராயணபட்டன் போன்ற கவிஞர். ஆனால், சிறு காப்பியங்கள் கூட இரணியனை ஒட்டி எழுந்ததாகத் தெரியவில்லை. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாககவி ‘சிசுபாலவத’த்தில் இரணியனை நரசிம்மம் மார்பைப் பிளந்து கொன்றதாக மட்டும் கூறியுள்ளான். பிரகலாதனைப் பற்றிய குறிப்பே இல்லை.

    முன் கண்டாங்கு, இராமாயண மகாபாரதங்களில் இரணியன்-பிரகலாதன்-நரசிங்கம் ஒட்டிய நிகழ்ச்சிகள் குறைவு; புராணங்கள் தோன்றி, பக்திப் பெருக்கெடுத்து ஓடிய காலத்திலே இக்கதை மகிமை பெற்றது என்பது இதன் காரணமாக இருக்கலாம்.

    நரசிம்ம உபநிஷத் என்னும் அதர்வ வேத உபநிஷத்தில் இரணியனைப்பற்றியோ, பிரகலாதனைப்பற்றியோ, பேச்சே இல்லை.

ஆ. தமிழ் நூல்கள், 

    தமிழ் இலக்கியத்தில் இக்கதையை நாம் முதன் முதல் காண்பது பரிபாடலில் ( 4-ம் பாட்டு ) 

        “செயிர்தீர் செங்கண் செல்வ! நிற்புகழப்
        புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்,
        பிருங்க லாதன் பலபல பிணிபட - அலந்துழி,
        மலர்ந்த நோய்கூர் கூம்பிய றடுக்கத்து,
        அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் - இகழ்வோன்
        இகழா நெஞ்சினன் ஆக,நீ இகழா
        நன்றா நட்டஅவன் நல்மார்பு முயங்கி,
        ஒன்றா நட்டவன் உறுவரை மார்பின்
        படிமதம் சாம்ப ஒதுங்கி,
        இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப
        வெடிபடா ஒடிதூண் தடியொடு
        தடிதடி பலபட வகிர்வாய்த்த உகிரினை” 

[செல்வ, பிருங்கலாதன் அலந்துழி, தாதை மார்பில் வாய்ந்த உகிரினை]