246. | தம்முடை யாற்றலு மானமுந் தோற்றுத்தம் | | இன்னுயி ரோம்பினு மோம்புக - பின்னர்ச் | | சிறுவரை யாயினு மன்ற தமக்காங் | | |
247. | கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து | | புலனொருங்கப் பொய்படிந் தாரும் - கொலைஞாட்பின் | | மொய்ம்புடை வீர்ரு மஞ்சார் முரண்மறலி | | |
246. இதுமுதல் மூன்று செய்யுட்களால் நிலையாமை கூறப்படும்.
ஆற்றல் - திறமை. மானம் உயிரினும் சிறந்ததென்பர். ‘மானமாவது எக்காலத்தும் தம் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாம்’ (குறள், மானம், அவதாரிகை.) தோற்று - இழந்து. ஓம்பினும் : உம்மை, இழிவு சிறப்பு. (பி-ம்.) ‘பின்னை’. சிறிவரையாயினும் - சிறிதளவேனும். மன்ற - நிச்சயமாக. தமக்கு இறுவரை யில்லையெனின் இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக என இயைக்க. ஆங்கு ; அசைநிலை. இறுவரை - இறக்கும் காலம். இல்லையெனின் : இறத்தல் நிச்சயமென்று தெரிவித்தபடி. இவ்வுடல் நிலையாதாதலின் இதன் அழிவுக்கு அஞ்சாது, மானத்தைக் காத்தல் வேண்டுமென்பது கருத்து.
“மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை, பீடழிய வந்த விடத்து” (குறள், 968), “மான வருங்கால நீக்கியிரவென்னும், ஈன விளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால், ஊட்டியக் கண்ணு முறுதிசேர்ந் திவ்வுடம்பு, நீட்டித்து நிற்குமெனின்” (நாலடி, 40), “மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே” (இனியவை நாற்பது, 14) என்பன இதனோடு ஒப்பு நோக்கற்பாலன.
247. கலனழிந்த கற்புடைப் பெண்டிரென்றது கைம்மெண்டிரை; கலன் - ஆபரணம்; இங்கே மங்கல நாண். ஐந்து புலன் ஒருங்க - சுவை முதலிய ஐம்புலன்களும் ஒருவழிப்படும்படி. பொய்கடிந்தா ரென்றது துறவிகளை. (பி-ம்.) ‘பொய்யொழிந்தோரும்;. “சந்ததமும் வேதமொழியாதொன்று பற்றியது தான்வந்து முற்றுமெனலாற் - சகமீ திருந்தாலு மரணமுண்டென்பதைச் சதாநிஷ்டர் நினைவதில்லை” (தாயுமானவர்.) ஞாட்பின் - போரில். மொய்ம்பு - வன்மை. உடம்பின் நிலையாமையை எப்பொழுதும் உள்ளத்திற் கொண்டிருத்தல் பற்றி வீரர், “காஞ்சி சான்ற வயவர்” (பதிற். 65 : 4, 90:39) எனப் பாராட்டப் படுதல் காண்க. முரண்மறலி - இயல்பாகவே மாறுபாட்டையுடைய யமன். தும்பை முடிச்சூடினும் - உயிரைக் கொள்ளும் பொருட்டுத் தானே சினத்தோடு
|