248. | புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் | | கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் | | விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் | | |
249. | இகழி னிகழ்ந்தாங் கிறைமக னொன்று | | புகழினு மொக்கப் புகழ்ப - இகன்மன்னன் | | சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும் | | |
வந்தாலும்; போர் செய்வோர் தும்பையைச் சூடுதல் புறத்திணையிலக்கணமென்பது இங்கே அறியத்தக்கது. மறலி தும்பை முடிச் சூடினும், பெண்டிரும் கடிந்தொரும் வீரரும் உயிர் விடுதற்கு அஞ்சார்.
இச்செய்யுள் புகழொப்புமைக் கூட்டவணி.
248. உடம்பின் தூய்தன்மையும் அதனாற் பயன் கொண்டாரது மேன்மையும் கூறப்படும்.
புழு நெளிந்து - புழுக்கள் நெளியப்பெற்று. யோசனை நாறுமென்றல் ஒரு மரபு. கழிமுடை நாற்றத்தவேனும் - மிக்க புலால் நாற்றத்தை யுடையனவாயினும். விழலர் - வீணர். விளிவுன்னி - இறத்தலை நினைந்து. வெய்துயிர்ப்பர் - அச்சத்தால் பெருமூச்செறிவர். மெய்ப்பயன் கொண்டார் - உடம்பாலாகிய உண்மையன பயனைக் கொண்டவர்; சுமையென்றது உடம்பின். பயன் கொண்டார் சுமை போடுதற்குச் சுளியார்; சுளியார் - வெறுக்கமாட்டார்; என்றது உவப்போடு உயிரை விடுவரென்றபடி.
“கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார், துரும்பெழுந்து வேங்காற் றுயராண் டுழவார், வருந்தி யுடம்பின் பயன்கொண்டார் கூற்றம், வருங்காற் பரிவ திலர்” (நாலடி. 35.)
249. அரசன் சென்ற வழியே குடிமக்கள் செல்வரென்பர்.
இறைமகன் இகழின் - அரசன் ஒன்றை இகழ்ந்து கூறினால், புகழ்ப என்பதற்குப் பின்னேயுள்ள மன்பதை என்பதை எழுவாயாக்குக. புகழ்ப - புகழ்வார்கள். மன்பதை மன்னன்சீர் வழிப்பட்டதே. மன்பதை - மக்கட்டொகுதி. புணை - தெப்பம்; மற்று: அசை நிலை. தெப்பம் நீர் செல்லும் வழியே செல்லுமாறு போலக். குடிகளும் அரசன் சென்ற வழியே செல்வர்.
அரசன் செல்லும் வழியே குடிகள் செல்லுமாதலின் அதனை அறிந்து நல்வழியிலே அவன் செல்லுதல்வேண்டுமென்பது குறிப்பு.
இச்செய்யுள் எடுத்துக்காட்டுவமையணி.
|