250. | செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி | | வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுண்மத்தத* | | கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும் | | |
251. | கைவரும் வேந்த னமக்கென்று காதலித்த | | செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால் | | எண்மைய னேனு மரியன் பெரிதம்மா | | கண்ணில னுள் வெயர்ப்பி னான். |
250. அரசன் வெகுண்டபோதும் நீதி கூறுதல் மந்திரியின் கடமை யென்பது இதிற் கூறப்படும்.
செவி சுட - செவி பொறாதபடி. அறிவு மூட்டி - அறிவை உண்டாக்கி. வெகுளினும் - அரசன் கோபித்தாலும். வாய் வெரீஇ - சொல்லுதற்கு அஞ்சி. பேரா - அமைச்சர்கள் நீங்கமாட்டார். அறிவு மூட்டிப் பேரா. *கவிழ் மத்தத - சொரிகின்ற மதநீரையுடைய. பாகு கைம்மா வயத்ததோ; அன்றென்றபடி; பாகு - பாகன்; கைம்மா - யானை. எத்திறத்தும் - எல்லா வகையிலும். அமைச்சு அம்மாண்பினவே - அமைச்சர்களும் அந்தத் தன்மையை யுடையவர்களே. பாகு, அமைச்சு: உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறிணைச் சொற்கள்.
அரசனை யானையாகவும் அமைச்சனைப் பாகனாகவும் கூறும் மரபு, ‘மதச்செருக்காற் பாகன் தோட்டியை நீவுமாறுபோலக் காமக்களிப்பால் தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல்நோக்கிக், களிறனான் என்றார்’ (சீவக. 200, ந) என்பதனால் விளங்கும்.
“அறிகொன் றறியா னெனினு முறுதி, உழையிருந்தான் கூறல் கடன்” (குறள், 638); “அரைசர் சீறுவ ரேனு மடியவர், உரைசெயாதொழி யார்க ளுறுதியே” (கலிங்கத். 366); “தலைமகன் வெகுண்ட போதும், வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின் றுரைக்கும் வீரர்” (கம்ப. அயோத்தி. மந்திரப். 9.)
251. மன்னரைச் சார்ந்தொழுகும் முறை கூறப்படும்.
வேந்தன் நமக்குக் கைவரும் - அரசன் நம் வழிப்படுவான். காதலித்த - தாம் விரும்பியவற்றை. செவ்வி தெரியாது அரசன் தாம் கூறுவனவற்றை ஏற்றுக் கொள்ளும் சமயத்தை அறிந்து கொள்ளாமல். எண்மையனே்னும் காண்டற்கு எளியனானாலும். அம்மா : வியப்பிடைச் சொல். பெரிது அரியன். கண் - கண்ணோட்டம் ஆகுபெயர். உள் வெயர்ப்பினான் - உள்ளே அடக்கிய சினத்தை யுடையவனாவன்.
“கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார், துளக்கற்ற காட்சி யவர்” (குறள், 699.) -------------------------------------------------------------------------------------------------- * | 'கவிழ் மதத்த’ என்றும் பாடம். | |