New Page 1

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

25

முகய்யித்தீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத் தமிழ் - அப்துல் காதிறுப் புலவர்
செய்குதாவூது வீலியுல்லா பிள்ளைத் தமி்ழ் - சொர்ண கவி நாயினா முகம்மது பாவா புலவர்
நபிகள் நாயகம் பிள்ளைத்  தமி்ழ் -  செய்குமீரான் புலவர்
கோட்டாற்றுப் பி்ள்ளைத் தமிழ் - செய்குதம்பிப் பாவலர்
பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் -

செய்குமீரான் புலவர்

   இவ்வாறு பற்பல பிள்ளைத் தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் பல்கியுள்ளன.  சைன பௌத்த புலவர்கள் பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடி இருப்பதாக அறிதற்கு இல்லை. 

   இதுவரை கூறப்பட்டு வந்த பிள்ளைத் தமிழ்க்குரிய இலக்கணங்களாலும், நூற்களாலும் புலவர்கள் தாம் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோர்மீது பிள்ளைக் கவிபாடுவர் என்பது புலனாகிறது.  மேலே, சுட்டப்பட்டவர்களைக் குழந்தையாக உளம் கொண்டு கற்பனை பல அமையப்படுவது இப்பிள்ளைத் தமிழ்க் கவி ஆகும்.  பாட்டுடைத் தலைவர்கள் பிள்ளைகளாகப் பாவிக்கப்பட்டவர்கள் அல்லரோ? அவர்களது அரும்பெருஞ் செயல்களைத் தம் குழந்தைப் பருவத்தில் எப்படிச் செய்திருக்க முடியும் என்ற ஐயம் ஏற்படல் கூடாது.  அப்பாட்டுடைத் தலைவர்கள் செயற்கரும் செயல்களைக் குறித்துப் பிள்ளைக் கவியில் பாடவில்லை யாயின், நூல் என்னும் அமைப்புக்குள் அமையாமல், வெறும் பருவங்கள் மட்டும் அமைந்திருக்கும்.   ஆகவே, இதனை உளம் கொள்ளுதல் வேண்டும்.  குழந்தையாகக் கொண்டது பாவனையே அன்றி வேறன்று.

    ஈண்டு ஓர் இன்றியமையாத குறிப்பினை உளம் கொள்ளுதல் வேண்டும்.  இதுவரையில் பாடப்பட்ட பிள்ளைத் தமிழ் நூல்களை ஒருவாறு அறிந்தனம்.  இத்தனைப் பிள்ளைத் தமிழ்