களுள

26

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

களுள் ஒன்றிலாவது முழுமுதற் பரம் பொருளாம் முக்கண் மூர்த்தியின்மீது பாடப்பட்டதாகத் தெரிந்திலது.  காரணம், இறைவன் யாண்டேனும் பிறந்து வளர்ந்து செயல் புரிந்ததாகக் காணக்கிடைக்காமையே ஆகும்.  அவன் பிறவாயாக்கைப் பெரியோன்.  ஆனால், திருவிளையாடற்புராணத்துள் விருத்தகுமாரபாலரான படலத்தில் குழந்தையாகக் காட்சி அளித்தனனே எனில், அந்த நேரத்திற்கு அவ்வாறு காட்சி அருளினனே அன்றித் தொடர்ந்து வளர்ந்து பெற்றோர்கட்கோ, மற்றோர்கட்கோ அவன் இன்பம் ஊட்டியதை ஆண்டுக் காண்கின்றோம் இல்லை. ஆகவே, பரமன்மீது அன்றும், இன்றும் பிள்ளைத் தமிழ் நூல் பாடப்படவில்லை என்பதை உளத்தில் கொள்ளவும்.  இனியும் எவரும் பாடார். 

   இனி அடுத்தாற்போல் பிள்ளைத் தமிழ் நூலில் அமைந்துள்ள பத்துப் பருவங்களைப்பற்றிய விளக்கத்தினைக் காண்போமாக.  பத்துப் பருவங்கள் இன்னின்ன என்பதும் அவற்றுள் ஆண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை, பெண்பால் பிள்ளைத் தமிழ்க்குரிய பருவங்கள் இவை என்பனவும் முன்பே குறிக்கப்பட்டன.  

   காப்புப் பருவம் :   இது பிள்ளைத் தமிழ் ஆசிரியர் தாம் பாட அமைத்துக்கொண்ட பாட்டுடைத் தலைவனையோ, தலைவியையோ தெய்வங்கள் காக்க எனப் பாடும் பருவமாகும்.  இது பிள்ளை பிறந்த மூன்றாம் திங்களிலே கூறப்பெறும் என்பர்.  இரண்டாம் மாதத்தில் கூறப்பெறும் என்பாரும் உளர்.

       “கலையார் செஞ்சொல் தமிழ்ப்பெருமான்

       காழிப் பெருமாள் தனைக்காக்க “

                              - திருஞான சம்மந்தர் பிள்ளைத் தமிழ்.

 

   செங்கீரைப் பருவம் :    இது குழந்தை ங்குவா, ங்குவா என ஒலி எழுப்புவதை வேண்டும் பருவம் என்பர்.  கீர் எனும் மொழி, சொல் என்னும் பொருளது.  நக்கீரர் என்ற பெயர்