பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

27

காரணத்தையும் அறிக.  குழந்தையின் மொழியாதலின் இது செங்கீரை எனப்பட்டது.  ஐகாரம் சாரியை.  ஆனால் பல பிள்ளைத் தமிழ் நூல்களில் குழந்தை இரு கைகளைத் தரையில் ஊன்றிக் கால்களில் ஒன்றை முட்டிக் கால் இட்டு, தரையில் ஊன்றி ஒன்றைப் பின்னோக்கி நீட்டித் தலை அசைத்து ஆடலைக் குறிப்பது செங்கீரை என்ற குறிப்புக் காணப்படுகிறது.  இதனை, 

     மங்கல ஐம்படையும் தோள்வளை யும்குழையும்

        மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக

     எங்கள் குடிக்கரசே ஆடுக செங்கீரை

        ஏழுல கும்உடையாய் ஆடுக செங்கீரை

என்று பெரியாழ்வாரும் 

வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார்

அருமறைகள் தலைஎடுப்ப ஆண்டதிரு முடிஎடுத்துப்

பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோம் என்பார் போல்

திருமுகமண் டலம் அசையக் செஞ்கீரை ஆடினார்

எனச் சேக்கிழாரும் 

     ஒருதாள் உந்தி எழுந்திரு கையும்

        ஒருங்கு பதித்துநிமிர்ந்

     தருள்பொழி திருமுகம் அசைய அசைந்தினி

        தாடுக செங்கீரை

                                -முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்.

என்று குமரகுருபர சுவாமிகளும்,             

     ஈனமக லனையதா மரைபதித் தொருதாள்

        இருத்திஒரு தாள் எடுத்தே

     ஏழ்கனி கனிந்தமுக தாமரை மலர்ந்தசைய

        இருமணிக் குழைவில் வீசத்

     தேனமர் நறுங்குதலை சீர்ப்பமங் களவல்லி

        செங்கீரை யாடிஅருளே

                                -மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ்