எனத
28 |
பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி |
எனத் திரிசிரபுரம் மகாவித்துவான்,
மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், மற்றுமுள்ளவர்களும் பாடியுள்ள பாடல்களால் தெளியலாம்.
இஃது ஐந்தாம் மாதத்தில் வேண்டப்படும் என்பர். இதனால் குழந்தை அசைந்தாடுவது செங்கீரை எனப்பட்டது.
கீர் என்பது வட சொல். அதன் பொருள் கிளி என்பது. செம்மை என்பது அழகு என்றும் பொருள்
தரும். ஆகவே, கிளி அசைந்தாடுவதுபோல ஆடுக என்று கூறினும் அமையும்.
தாலப் பருவம் :
இது குழந்தையைத் தூங்கச் செய்யும் பொருட்டு அன்னையர், தாதியர் தம் நாக்கை அசைத்துப்
பாடல் பாடும் பருவம். தால் என்பது நாக்கு. தாலாட்டுதல் நாக்கை அசைத்தல், இஃது எட்டாம் மாதச்
செயல் என்பர். “எட்டாம் திங்களில் இயல் தாலாட்டலும் “ என்று பிங்கலந்தை கூறுதல் காண்க.
சமர மயூரா குமர செயூரா
தாலோ தாலேலே
- சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ.்
ஒரு சிலர் குழந்தையை
நோக்கி, அதன் நாக்கை அசைக்குமாறு, நீட்டுமாறு வேண்டும் பருவம் என்றும் கருதுவர். அக்குறிப்பு
எந்நூலிலும் காணக்கிடைத்திலது. குழந்தையை உறங்க வைக்கத் தாயர் தம் நாக்கை அசைத்தலே தாலாட்டு
என்ற குறிப்பே எல்லாப் பிள்ளைத் தமிழ் நூல்களிலும் காணப்படுகிறது.
தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவசினிலும்
தூயசுடர்த் தொட்டிலிலும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமரையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்
என்னும் பெரிய புராணப்
பாடலைக் காண்க.
முன்னர்த் தாலாட்டுப்
பருவமும் அதன்பின் செங்கீரைப் பருவமும் அமையப்படுதலும் உண்டு என்பது பெரியாழ்வார்
வாக்கினாலும், சேக்கிழார் பெருமானார் மொழியினாலும்
|