உணர

 

பிள்ளைத் தமிழ்நூல் ஆராய்ச்சி

29

உணர்ந்துகொள்க.  இதற்கு இலக்கணமும் துணைபுரிகிறது.  “செப்பரிய காப்புத்தால் செங்கீரை “ என்னும் வெண்பாப் பாட்டியலைக் காண்க. 

   சப்பாணிப்பருவம் :  இது குழந்தையை இருகைகளையும் சேர்த்துத் தட்டி ஓசை எழுப்புமாறு வேண்டுதல் ஆகும். இஃது ஒன்பதாம் மாத நிகழ்ச்சி. “ ஒன்பதாம் திங்களில் உயர் சப்பாணியும் “  என்பது பிங்கலந்தை.

 

     “குலைகெழு தடநிறை கலைசை நகர்க்கிறை

      கொட்டுக சப்பாணி “ 

                            - செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்

   முத்தப் பருவம் :   இது குழந்தையை முத்தம் தருமாறு வேண்டும் பருவமாகும். இது பதினோராவது மாத நிகழ்ச்சி,  “ பத்தினோடு ஒன்றில் முத்தம் கூறலும்“ என்பது பிங்கலந்தை.  இந்தப் பருவத்தைப்பாடுவதில் புலவர்கட்குப் பெருவிருப்பம் ஏற்படும். முத்தம் என்னும் சொல்,  முத்துக்களையும் வாய் முத்தத்தையும் குறிக்கும்.  ஆகவே, குழந்தையை முத்தம் கேட்கும்போது,  “பல்வேறு இடங்களில் தோன்றும் முத்தம், வேண்டா.  உன்முத்தமே வேண்டும் “ என்று கூறும்போது  எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்பதை அப்பாட்டைப் படிக்கும்போதுதான் தெரியவரும்.

 

முத்தம்தனக்கு விலைஇல்லை முருகா முத்தம் தருகவே

முத்தம் சொரியும் கடல்அலைவாய் முருகா முத்தம் தருகவே

                             - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

 

   வாரானைப் பருவம் :   இது குழந்தையை வருக வருக என அழைக்கும் பருவம் ஆகும்.  இது பன்னிரண்டாம் மாத நிகழ்ச்சி.  அதாவது ஓராம்  ஆண்டு நிகழ்ச்சி. இதனைப் பிங்கலத்தை நிகண்டு “ஆண்டுவரையின் ஈண்டு வருக என்றலும் “  என்று கூறுகிறது.  வா+ரு+ஆனை என்று இச்சொல் பிரியும்.  ஆனை தொழிற் பெயர் விகுதி.  இது வருகைப் பருவம் என்றும் கூறப்பெறும்.   அதுபோது,