New Page 1

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

41

    செ. 4. நடராசர் பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுக்க உமாபதி சிவத்திற்கு கடிதம் எழுதியது.  நிருவாண தீட்சை விளக்கம்.  உமாபதி சிவத்தின் மாண்பு.  உமாபதி சிவம் சேக்கிழார் வரலாற்றுப் புராணம் பாடியது.  பக்கம் 234-238

    செ. 5. வேளாளர் கங்கை மரபினர், கங்கை ஆயிரமுக முடையாள், வேதம் ஆயிரம், சிதம்பர ஆயிரக்கால் மண்டபத்தில் பெரிய புராணம் அரங்கேற்றம், குன்றத்தூர் நீர் வளன், இயற்கை வளன்.  பக்கம் 239-243

     செ. 6. திரு பிள்ளை அவர்கள் மக்களது குற்றத்தை உபசார வழக்காக எடுத்து மொழிதல், சேக்கிழாரைப் போற்றுதல் ;  சேக்கிழார் ஆம்பல் மலர் அணிந்திருத்தல் ;  அதற்குக் காரணம். பக்கம் 243-250

     செ. 7. சேக்கிழாரது பலவித பண்புகள் தோன்ற அவரை விளித்தல்.  பக்கம் 250-255

     செ. 8. சேக்கிழாராம் குழந்தை அணிந்த அணிகலன்கள், சேக்கிழார் வாய் நீர் ஒழுக, திருநீறு பொலிய, புன் முறுவல் பூத்துத் திகழ்தல்.  பக்கம் 255-259

     செ. 9. சரியை, கிரியை, யோக, ஞானக் குறிப்பு, சிவனடியார்களில் இன்னின்னார் இந்திந்த நெறியில் திகழ்ந்து பேறு பெற்றனர் எனல்.  சிவபெருமானே சேக்கிழாராக வந்து சிவனடியார்களைப் பற்றிய அரிய குறிப்புக்களைக் கூறினார் எனல்.  பக்கம் 259-270

     செ. 10. பாலாற்று வரலாறு, வர்ணனை, பக்கம் 270-273.

3. தாலப் பருவம்  

        செய்யுள் 1. வேளாளர் முத்துக்களைக் குவித்தல் ; அன்னங்கள் முத்துக் குவியலில் வீற்றிருத்தல் ; வேளாளர் அன்னத்தின் முட்டைகளையும் முத்துக்கள் எனக் குவித்தல் ;