42

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

     இது  குறித்து அவர்கள் வருந்துதல் ;  சேக்கிழார் சகலாகம பண்டிதர் எனல்.  தலாப்பருவ விளக்கம்.  பக்கம் 274-282 

     செ. 2. குன்றத்தூர், திருப்பாற் கடல்போல் இருந்தமைக்குக் காரணம்,  திருநீற்றின் மாண்பு. பக்கம் 282-286 

     செ. 3. குன்றத்தூர் தேவலோகத்தினும் சிறந்தது என்பதற்குரிய காரணம் ;  திருஞான சம்பந்தர் தம் திருமணத்தில் எவர்க்கும் முத்தி தந்த திருப் பெருமாண நல்லூர் போன்றது குன்றத்தூர் எனல். பக்கம் 286-289

      செ. 4. திருமாலுக்கு முன்னைய நிறமும், பின்னைய நிறமும் ஏற்பட்ட காரணம், குன்றத்தூர் வாசிகளின் மாண்பு. பக்கம் 289-292

      செ. 5. குன்றத்தூர் மடங்களின் மாண்பு;  திருப்பனந்தாள் மடம், சேக்கிழார் மடம், குன்றத்தூரின் பொருள்வள மக்கள் மாண்பு. பக்கம் 292-294

      செ. 6. பெரிய புராணத்திற்குத் தொல்காப்பியம் இலக்கணம் ;  இதற்குரிய காரணங்கள் ; பெரிய புராணம் கேட்கத் தக்க அதிகாரிகள் ;  பெரிய புராணம் படிப்பதன் பயன் ;  குன்றத்தூர் மாண்பு.  பக்கம் 295-303

      செ. 7. அடியார் பெருமைகளை அறிவிக்க வல்லவர் சேக்கிழாரே எனல்.  இறைவர் முதல் எடுத்துக் கொடுத்தது ; சேக்கிழார்க்கு இறைவர் எடுத்துக் கொடுத்த காரணத்தால் தமிழ் மாண்புடையது என வியத்தல் ; அன்பர்கள் பெரிய புராணத்தைப் புகழ்ந்து பேசுதல், குன்றத்தூர் சிறப்பு.  பக்கம் 304-311

      செ. 8. பத்திச் சுவை நனிச் சொட்டச் சொட்டக் கவி பாடியது, சேக்கிழார் அநபாயனை அடியார் வரலாற்றைக் கேட்கச் செய்தது, யாவரும் சிவம் அடையக் கவி பாடியது, குன்றத்தூர் நீர்வளன்.  பக்கம் 312-318