New Page 1
44 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
செ. 6.
நடராசர் சிவகாமி காண நடனம் புரிதல், இறைவர் அடி எடுத்துக் கொடுத்தபோது தில்லைவாழ் அந்தணர்கள்
இவரைப் போற்றிச் சிறப்பித்தது, திருீநுறு ஏற்றல். பக்கம் 382-387
செ. 7.
வேளாளர் இல்லை என்னாது ஈவர் எனல், குன்றத்தூர் மாளிகைகளின் சிறப்பு ; சேவையர் என்பதன்
விளக்கம், சேக்கிழார் நாவலர் எனல் பக்கம் 387-392
செ. 8. சேக்கிழாரே
ஒரு நாட்டின் வர்ணனை ஐந்திணை வர்ணனை இவ்வாறு அமையவேண்டும் எனக் கற்பித்தவர். ஐந்திணைகள்
இன்ன எனல், அன்பு நனி சிறக்கக் கவி பாடியவர், இருபத்து நான்கு கோட்டங்கள், குன்றத்தூர்ச்
சிறப்பு. பக்கம் 392-396
செ. 9.
சேக்கிழார் நூலாசிரியராகவும்,
உரையாசிரியராகவும், போதகாசிரியராகவும், ஞானாசிரியராகவும் திகழ்பவர் எனல். பக்கம்
397-404
செ. 10.
குன்றத்தூர் திருநாகேசுவரம், இந்திர நீல பருப்பதம், ரத்னகிரி, திருக்கயிலாயம் போன்று
இருத்தலும் காரணமும், இத்தலங்களைப் பற்றிய குறிப்பு. பக்கம் 404-410
5. முத்தப் பருவம்
செய்யுள்
1. வேதப் பகுதியாகிய பஞ்சாதீ விளக்கம் நால்வகை மரபினர். மூவகைப் பிறப்பினர்,
விளக்கம் முத்தப் பருவ விளக்கம். பக்கம் 411-418
செ. 2.
சிவபெருமான் சங்கப் புலவர்களுடன் ஒருவராய்த் தமிழ் ஆய்ந்தது ; காரைக்கால் அம்மையார் கைலைக்கு
ஊர்ந்து சென்றது ; எலும்பைப் பெண்ணாக்கியது ; முதலை உண்ட பாலனை அழைத்தது. (இப்பாடல் தமிழின்
மேன்மையைத் தெரிவிக்கும்) பக்கம் 418-425
|