New Page 1

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

51

கொண்டு திகழ்தல்.  நெய்தல் பறை, இறைவன் யானைத்தோல் போர்த்திருக்கும் காரணம்.  மாயிலைக் கொழுந்து தீப்போல இருத்தல் ;  செல் என்னும் சொல்லின் நயம்.  பக்கம் 678-684 

     செ. 6. சேக்கிழாரின் பாடல்கள் சுவை மிகுந்தது எனல்.  “ கனியினும் “  என்றும் அப்பர் பாட்டின் உள் பொருள்.  சேக்கிழார் கவிகள் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் எனல்.  குன்றத்தூர் மாளிகை மாண்பு.  பக்கம் 684-697

    செ. 7. பலர் சேக்கிழார் கவிகளைப் பற்பலவாறு புகழ்ந்து பாராட்டுதல் ; அவ்வாறு கூறியது உண்மை என்பதை விளக்கி இருத்தல்.  பக்கம் 698-704

    செ. 8. சேக்கிழார் கவி பாட நிகழும் நிகழ்ச்சிகள் ; இறைவர் திரிபுரம் எரித்தது ; நடனத்தைப் பலரும் வணங்குதல் ;  சேக்கிழார் பாடல்களை மூவர் முதலிகளும் வியத்தல் ;  தமிழ் எவராலும் வெறுக்கப்படாதிருத்தல் எனல்.  பக்கம் 705-710

     செ. 9. சேக்கிழார் பெரிய புராணத்தைத் தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் எழுதியது ;  புலவர்பாட, எழுதுவோர் எழுதுதல் ;  முந்து தமிழ் என்றதன் சிறப்பு ;  குன்றத்தூர் மாளிகை மாண்பு.  பக்கம் 710-716

     செ. 10. இறைவர் பெரிய புராணத்தை,  “ யாவரும் கேட்க “  என அசரீரியாக இருந்து மொழிந்தது. பக்கம் 716-719

 10. சிறு தேர்ப் பருவம் 

        செய்யுள் 1.  சிறு தேர்ப் பருவ விளக்கம் ;  சோழ மரபினர் மாலை ;  மூவேந்தர் மாலை ;  அநபாயன் சேக்கிழார்க்குக் கவரி வீசல் ;  இப்பாட்டுச் சேக்கிழாரை யானைமீது அமர்த்தி வீதிவலம் செய்தபோது நிகழ்ந்த நிகழ்ச்சிகள்