பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்101


என்று  ஓதுவார் பட்டினத்தாரின்  இந்தப் பாடலைப்  பாடும்போது உயிரற்ற
அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது.

     பிணம்  சுடுவதற்கு  முன்போ   அல்லது   புதைப்பதற்கு   முன்போ
வாய்க்கரிசி  இடுதல்  என்ற  சடங்கு  உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி
இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

“அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே யென வழைத்த வாய்க்கு”

என்று  வாய்க்கரிசி   இடுபவர்   மனம்   அழும்  ஆசையை  இப்பாடல்
எதிரொலிக்கிறது.

     வெட்டியான்  மண்ணால்   உடலை   மூடுகிறான்.  அல்லது  உடலை
வறட்டியால்  (எரு மூட்டையால்)  மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு
தடவை பார்க்கத் துடிக்கிறது.

“ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி”

     பாசத்திற்கு ஆட்படாதார் ஆர்?

     உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது.
எத்தனை  அருமையாய்  எம்மைப்  பாதுகாத்த  ‘தாய்’  அவளுக்கா இந்தக்
கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது.

“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி