சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ வெரியத் தழல்மூட்டு வேன்” தம் குழந்தைப் பருவத்தில் சோறூட்டிய தாயாரின் கருணை முகம் மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார். “வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்” பட்டினத்தார் மனத்தடுமாற்றத்தை இன்னுமொரு பாடலும் கூறுகிறது. “அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன் மகனே யெனவழைத்த வாய்க்கு” இனியும் காத்திருக்க இயலாது. அன்னை உடல் எரிக்குள் மூழ்குவதே சரி என்று நினைத்த பட்டினத்தார் அவ்வுடலைப் புதிய முறையில் பாட்டாலேயே தகனம் செய்கிறார். “முன்னை யிட்ட தீ முப்புரத்திலே பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில் அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே யானு மிட்ட தீ மூள்க மூள்கவே” தீக்கடவுள் பட்டினத்தாரின் வாக்குக்குப் பணிந்து உடலைத் தீக்கிரையாக்கினான். அப்போது பட்டினத்தாருக்கு உடல் பதறுகிறது. வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து, “வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியே னையகோ - மாகக் |