குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக் கருதி வளர்த்தெடுத்த கை” தீ உடலை ஏறத்தாழ எரித்துவிட்டது. மேடாக இருந்த உடற்கூடு சாம்பலாய்ப் போய்விட்டது. “வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன் றன்னையே யீன்றெடுத்த தாய்” இப்பொழுது அவர் மனம் ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது. உடற் சாம்பல் சேகரிக்கப்படுகிறது. இனி என்ன? நேற்று உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை என்று சமாதானமடைகிறார். “வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள் நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம லெல்லாந் சிவமயமே யாம்” என்று முடித்து எல்லோரையும் பாற்றெளிக்க அழைக்கின்றார் பட்டினத்தார். இந்த பட்டினத்தார் பாடலிலே, “மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந் தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே” என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர் கண்ணதாசன். ‘பாத காணிக்கை’ என்ற திரைப்படத்தில், |