பக்கம் எண் :

104சித்தர் பாடல்கள்

“வீடுவரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?”

என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான்.
பட்டினத்தார்   பாடலை  வாசிக்க   மறந்தவர்கள்  கண்ணதாசனின்  இந்தப்
பாடலைக் கேட்க மறந்திருக்க மாட்டார்கள்.

     இதுபோலவே  பட்டினத்தாரின்  உடற்கூற்று   வண்ணத்தைப் படிக்கத்
தயங்குபவர்களுக்கு அதன் சுருக்கமாகப்  பின்வரும் திரைப்படப் பாடலையும்
கவியரசு பாடியுள்ளார்.

“எந்த ஊர் என்பவனே !
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?
மேலூரில் வாழ்ந்திருந்தேன்
,,,,,,,,,,,,,,,,,,”

     இசையுடன்   பாடும்போது   எந்தப்   பாடலும்   ரசனைக்குரியதாகி
விடுகிறதல்லவா?

     இதோ   பட்டினத்தார்   பாடலையும்  ஒருமுறை  பாட  வேண்டாம்;
படித்துத்தான் பாருங்களேன்.

“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,”