கோயில் திரு அகவல் - 1 நினைமின் மனனே ! நினைமின் மனனே சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை நினைமின் மனனே ! நினைமின் மனனே ! அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க ! | 5 | | | | பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; | 10 | | | | அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்; உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்; என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்; பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன. | 15 | | | | தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன; பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன; ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின; செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை; சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை; | 20 | | | | இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை; ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும், புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள் | 25 | | | | பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி; மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி; உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி; வளியும் மலமும் வழங்கும் ஒருவழி; | 30 |
|
|
|
|