குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய் கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய் கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய் கரவாமல் உளங்களித் தாடு பாம்பே. | 22 |
| | |
மண்டலத்தைத் தாங்குமிக வல்லமை கொண்டாய் மாயனுக்குப் படுக்கைக்கு வண்ணப் பாயானாய் கண்டபடை நடுங்கிடக் காட்சியும் பெற்றாய் கண்ணேசெவி யாகக்கொண்டாய் ஆடு பாம்பே. | 23 |
| | |
சந்திரனைச் சூரியனைத் தாவித் தீண்டினாய் சங்கரனுக் காபரணந் தானுமாகினாய் மந்திரத்திற் கடங்கினாய் மண்டல மிட்டாய் வளைந்து வளைந்துநின் றாடு பாம்பே. | 24 |
| | |
சித்தர் வல்லபங் கூறல் எட்டுநாகந் தம்மைக்கையா லெடுத்தேயாட்டுவோம் இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம் கட்டுக்கடங் காதபாம்பைக் கட்டி விடுவோம் கடுவிஷத் தன்னைக்கக்கி யாடு பாம்பே. | 25 |
| | |
ஆதிசேடன் ஆயிகினுமெம் மங்கையி னாலே ஆட்டிவிடு வோமெங்கள் ஆக்கினைக்குள்ளே நீதியோடங்கியே நின்றிடச் செய்வோம் நின்றநிலை தவறாமல் ஆடுபாம்பே. | 26 |
| | |
தூணைச்சிறு துரும்பாக தோன்றிடச் செய்வோம் துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்குவோம் ஆணைபெண்ணும் பெண்ணை யாணு மாகச் செய்குவோம் ஆரவாரித் தெதிராய்நின் றாடு பாம்பே. | 27 |
| | |
எட்டுமலை களைப்பந்தாய் எடுத்தெ றிகுவோம் ஏழுகட லையுங்குடித் தேப்ப மிடுவோம் மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம் மகாராஜன் முன்புநீ நின் றாடுபாம்பே. | 28 |