மண்டலமுற் றுங்கையால் மறைத்து விடுவோம் வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம் தொண்டருக்குச் சூனியஞ் சொல்லிக் காட்டுவோம் தோன்றலுக்கு முன்பு நின் றாடாய் பாம்பே. | 29 |
| | |
மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கிவருவோம் முந்நீருள் இருப்பினு மூச்ச டக்குவோம் தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம் தார்வேந்தன் முன்புநீ நின் றாடு பாம்பே. | 30 |
| | |
செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் னாக்குவோம் செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம் இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம் எங்கள் வல்ல பங்கண்டுநீ யாடு பாம்பே. | 31 |
| | |
வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறுசெய்குவோம் வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம் நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் நாங்கள் செய்யும் செய்கையிதென் றாடு பாம்பே. | 32 |
| | |
அறுபத்து நாலுகலை யாவு மறிந்தோம் அதற்குமே லொருகலை யான தறிந்தோம் மறுபற்றுச் சற்றுமில்லா மனமு முடையோம் மன்னனே யாசானென் றாடு பாம்பே. | 33 |
| | |
சிறுபுலி யானையாளி சிங்க முதலாய்ச் சிற்றடிக்குக் குற்றேவல் செய்யச் சொல்லுவோம் வீறுபெருங் கடவுளை எங்களுடனே விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே. | 34 |
| | |
சித்தர் சம்வாதம் வாசுகியை ஒருபக்கம் மன்னநிறுத்தி மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே தேசுலவு தக்கனைத் தன்றிக்கிற் சேர்த்துச் செய்யபது மனைக்கொள் சித்த னாரே. | 35 |