மாடகூடமாளிகைகள் வண்ண மண்டபம் மதில்சூழ்ந்த அரண்மனை மற்றும் முள்ளவை கூடவாரா வென்றவந்தக் கொள்கை யறிந்தோர் குலவாமல் வெறுப்பாரென் றாடாய் பாம்பே. | 43 |
| | |
மலைபோன்ற செம்பொற்குவை வைத்தி ருப்பவர் மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ அலையாமல் அகத்தினை அத்தன் பால்வைத்தோர் அழியாரென் றேநீ துணிந் தாடாய் பாம்பே. | 44 |
| | |
பஞ்சணையும் பூவணையும் பாய லும்வெறும் பாழ்சுடு காடதிலே பயன் பெறுமோ மஞ்சள் மணம் போய்சுடு நாறுமணங்கள் வருமென்று தெளிந்துநின் றாடாய்பாம்பே. | 45 |
| | |
முக்கனியுஞ் சர்க்கரையும் மோத கங்களும் முதிர்சுவைப் பண்டங்களும் முந்தி யுண்டவாய் மிக்கவுயிர் போனபின்பு மண்ணை விழுங்க மெய்யாகக் கண்டோமென் றாடாய் பாம்பே. | 46 |
| | |
வண்ணப்பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும் வண்கவிகை ஆலவட்டம் மற்றுஞ் சின்னமும் திண்ணமுடன் யமபுரஞ் செல்லுங் காலத்தில் சேரவர மாட்டாவென் றாடாய் பாம்பே. | 47 |
| | |
மக்கள்பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர் மாளும்போது கூடவவர் மாள்வ தில்லையே தக்கவுல கனைத்தையுந் தந்த கர்த்தனைத் தாவித்தாவித் துதித்துநின் றாடாய் பாம்பே. | 48 |
| | |
கானலைமான் நீரெனவே கண்டு செல்லல்போல் காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார் மேனிலைகண் டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே. | 49 |