பெண்ணாசை விலக்கல் வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர் ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல் உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே. | 50 |
| | |
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச் சித்தப்பால் விழுங்கியே சீயென்று ஒறுத்தோம் குண்டுகட் டெருமை யேறுங் கூற்றுப் பருந்தைக் கொன்றுதின்று விட்டோமென் றாடாய் பாம்பே. | 51 |
| | |
வட்டமுலை யென்றுமிக வற்றுந் தோலை மகமேரு என்றுவமை வைத்துக் கூறுவார் கெட்டநாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தோர் கெடுவரென்றே நீதுணிந் தாடாய் பாம்பே. | 52 |
| | |
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக வருணித்துச் சொல்வார்மதி வன்மை யில்லாதார் குருநலம் பேசுகின்ற கூகைமாந்தர்கள் கும்பிக்கே இரையாவரென் றாடாய் பாம்பே. | 53 |
| | |
சிக்குநாறுங் கூந்தலைச் செழுமை மேகமாய்ச் செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக் கொப்பதாய் நெக்குநெக்கு ருகிப்பெண்ணை நெஞ்சில்நினைப்பார் நிமலனை நினையாரென் றாடாய் பாம்பே. | 54 |
| | |
நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும் நண்ணுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும் கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர் கோனிலையை யறியாரென் றாடாய் பாம்பே. | 55 |
| | |
மயிலென்றுங் குயிலென்றும் மாணிக்க மென்றும் மானேயென்றும் தேனேயென்றும் வானமு தென்றும் ஒயிலான வன்னமயிற் கொத்தவ ளென்றும் ஓதாமற் கடிந்துவிட் றாடாய் பாம்பே. | 56 |