பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்207


4. இடைக்காட்டுச் சித்தர் பாடல்

     இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர்.
இவரது  காலம்  கி.பி. 15ம்  நூற்றாண்டு  என்று  சொல்லப்படுகிறது.  இவர்
கொங்கணச்  சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே
உள்ள   இடைக்காடா    அல்லது   தொண்டை   மண்டலத்தில்   உள்ள
இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது.

     ஒருசமயம்  இவர்  பொதிய  மலைச்சாரலில்  வழக்கம்  போல்  ஆடு
மேய்த்துக் கொண்டிருக்கும் போது நவசித்தரில் ஒருவர் வந்து இவரிடம் பால்
கேட்க, அவருக்குப் பால் முதலியன கொடுத்து உபசரிக்கவே அவரும் இவரது
அன்பைக்  கண்டு  மகிழ்ந்து  இவருக்கு  ஞானத்தை  உபதேசித்து  விட்டுச்
சென்றாராம்.  அதனால்  ஏழை   ஆடு  மேய்க்கும்  இடையன்  மாபெரும்
சித்தரானார்.

    தமது சோதிட அறிவால் இன்னும் சிறிது காலத்தில் ஒரு கொடிய பஞ்சம்
வரப்போகிறது   என்பதை   உணர்ந்தார்.   முன்னெச்சரிக்கையாகத்   தமது
ஆடுகளுக்கு  எக்காலத்திலும்  கிடைக்கக்கூடிய  எருக்கிலை போன்றவற்றைத்
தின்னக் கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்னும் தானியத்தை மண்ணோடு
சேர்த்துப்  பிசைந்து  சுவர்களை  எழுப்பிக்   குடிசை  கட்டிக்  கொண்டார்.
எருக்கிலை  தின்பதால்  உடலில்  அரிப்பெடுத்து  ஆடுகள் சுவரில் உராயும்
போது உதிரும் வரகு தானியங்களை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு