தும்பியைப் பறக்க விட்ட இடைக்காடர் அடுத்த பாடலில் குயிலைப் பேசச் சொல்கின்றார். உலகம் ஒக்காளமாம் என்று ஓதுகுயிலே எங்கள் உத்தனைக் காண்பரிதென்று ஓது குயிலே என்று கூறுகின்றார். ஆடுமயிலே நடமாடு மயிலே! எங்கள் ஆதியணி சேடனைக் கண்டு ஆடு மயிலே என்று மயிலை ஆடச் சொல்கின்றார். மயில் ஆடிற்றா? அன்னத்தைக் காண்கின்றார். காற்றில் மரமுறியும் காட்சியைப் போல் நல்லறிவு தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப் போகும் மடஅன்னமே என்று கூறுகின்றார். குயில், மயில், அன்னத்தை கூவியழைத்து அவை திரும்பிப் பார்க்கவில்லைபோலும். தமது புல்லாங்குழலை எடுத்து வாசிக்கின்றார். தொல்லைப் பிறவி தொலைக்கார்க்கும் முத்திதான் இல்லை என்று ஊதுகுழலே பெட்டியிற் பாம்பெனப் பேய்மனம் அடங்க ஒட்டியே ஊதுகுழலே குழலோசைக்கு மயங்கி நின்ற ஆடுகளைப் பால் கறக்கிறார் இந்த இடைக்காடர். சாவாது இருந்திடப் பால்கற - சிரம் தன்னில் இருந்திடும் பால்கற வேவாது இருந்திடப் பால்கற - வெறு வெட்ட வெளிக்குள்ளே பால்கற |