இங்கு இவர் குறிப்பிடுவது குண்டலினி யோகத்தை. இறைவனை அடைய முக்தியை அடைய யோக மார்க்கமே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றார். பாடல்களைப் பக்குவமாகப் படித்தால் பல கருத்துக்கள் புலனாகும். காப்பு கலிவிருத்தம் ஆதி யந்தமில் லாதவ னாதியைத் தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல் மோ துறும்படி முப்பொறி யொத்துறக் காத லாகக் கருத்திற் கருதுவாம். | | | | தாண்டவராயக்கோன் கூறுதல் கண்ணிகள் எல்லா வுலகமு மெல்லா வுயிர்களும் எல்லாப் பொருள்களு மெண்ணரிய வல்லாள னாதி பரம சிவனது சொல்லா லாகுமே கோனாரே. | 1 | | | வானியல் போல வயங்கும் பிரமமே சூனிய மென்றறிந் தேத்தாக்கால் ஊனிய லாவிக் கொருகதி யில்லையென் றோர்ந்துகொள் ளுவீர்நீர் கோனாரே. | 2 | | | முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது முத்திக் குறுதிகள் செய்யாக்கால் சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ் சேரா வாகுமே கோனாரே. | 3 | | | தொல்லைப் பிறவியின் தொந்தமுற் றறவே சோம்பலற் றுத்தவஞ் செய்யாக்கால் | |
|