பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்231


     எல்லாக் கருத்துக்களும் சரி. அந்த இறைவனின் திருவடியை அடையும்
மார்க்கம்தான் என்ன?

     இறைவனின்  திருவடிகளின்  பெருமைகளை  இவ்வளவு நுண்மையாக
உணர்த்திய   திருவள்ளுவர்  அத்திருவடிகளை  அடையும்  மார்க்கத்தைச்
சொல்லாமலா இருந்திருப்பார்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
 நெறிநின்றார் நீடுவாழ் வார்”

     ஐம்பொறிகளால் விளையும் ஆசைகளை ஒழித்துக் கடவுளின் உண்மை
நெறியில்   நின்றவர்   நிலையான   பெருவாழ்வு  வாழ்வார்கள்.  அதாவது
நித்தியமான பெருவாழ்வாகிய இறைவனின் தாளை அடைவார்கள்.

     திருக்குறளின்    கடவுள்    வாழ்த்து    ஒட்டுமொத்த    அதிகார
கருத்துக்களையும்   இரண்டே   வரிகளில்   அடக்கிவிடுகின்றார்  நாயனார்.
அதாவது அகப்பேய் சித்தர்

நஞ்சுண்ண வேண்டாவே - அகப்பேய்
நாயகன்றாள் பெறவே
நெஞ்சு மலையாதே - அகப்பேய்
நீயொன்றும் சொல்லாதே”

     இறைவனின்   தாளை   அடையும்   மார்க்கத்தைக்  கேட்ட  அந்த
இளைஞனுக்கு மனம் தன் மனம் போனபடியெல்லாம் யோசனை கூறுகின்றது.

     “வானுலக  வாழ்க்கையினை  நாடி  இன்ப  வாழ்க்கையை  பெண்கள்
இன்பவாழ்க்கையை  இழந்தவர்கள்  கோடி” என்று மனம் பெண்ணாசையைத்
தூண்டுகிறது.  பெண்ணாசையால்  முக்தியை  அடைய  முடியுமோ? இல்லை
என்று மறுக்கிறது இன்னொரு மனம்.