மதுவை மாந்திக் களிப்பதால் இறைவனின் திருவடிகள் காட்சி தருமோ? அந்த காட்சிதான் இறைமையோ? வெளி மனத்தின் விளைவுக்கு உன் மனம் இல்லை என்ற பதிலைத் தருகிறது. மது, மாது, சூது இவைகள் இறைவனின் தாளை உணர்த்தாவிடில் வேறு எதுதான் இறைவனின் தாளை அடையும் மார்க்கம். சிந்தித்த உள் மனத்தை வெளி மனம் அடக்குகிறது. மனமே, நான் சொல்வதைக் கேள். மதுவும், மாதுவும், சூதுவும்தான் இறைவனை அடையும் மார்க்கங்கள். மனமே (வெளி மனமே) நீ அலையாதே. இவையெல்லாம் நீ அனுபவிக்கத் துடிக்கும் ஆசைகள். இந்த ஆசைகளெல்லாம் உண்மையான இன்பத்தை; இறைமையை உனக்கு உணர்த்த மாட்டா. ஆகவே என்னைக் குழப்பாமல் உண்மையாகவே இறைவனின் தாளைஅடையும் மார்க்கத்தைச் சொல் என்று மற்றுமொரு வழியை கேட்க, அப்படியானால் நஞ்சுண்டு இறந்து விடு, நீ நேரே இறைவனைக் காணலாம். என்ன உளறுகிறாய்? இறைவன் அன்பு வடிவானவர். உயிரைப் பலி கொடுத்துதான் அவரை அடைய முடியுமென்பது வீண் பிதற்றல். மரணம் என்பது இறைவன் வகுத்தது. அது தானாகத்தான் வரவேண்டுமே ஒழிய நாமாகத் தேடிச் செல்லக்கூடாது. “சரி வேண்டாம்; இப்படி செய்யலாமா? என்று இன்னுமொரு மார்க்கத்தை உபதேசிக்க வருகிறது வெளிமனம். |